ஸிஜியன்-13 எனும் புதிய செயற்கைக் கோள் ஒன்று, ஏப்ரல் 12ஆம் நாள் இரவு 7:04 மணியளவில் சீனாவின் ஷிஜாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த புதிய ரக செயற்கைக் கோள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உயர் திறன் வாய்ந்த தொலைத் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். அதன் செயற்திறன், முன்னதாக வடிமைக்கப்பட்டுள்ள அனைத்து தொலைத் தொடர்புக் செயற்கைக் கோள்களின் மொத்தத் திறனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.