• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அகண்ட அலைவரிசை இணைய சேவை வழங்கும் புதிய செயற்கைக் கோள்
  2017-04-13 16:38:45  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸிஜியன்-13 எனும் புதிய செயற்கைக் கோள் ஒன்று, ஏப்ரல் 12ஆம் நாள் இரவு 7:04 மணயளவில் சீனாவின் ஷிஜாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த புதிய ரக செயற்கைக் கோள் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது உயர் திறன் வாய்ந்த தொலைத் தொடர்புச் செயற்கைக் கோள் ஆகும். அதன் செயற்திறன், முன்னதாக வடிமைக்கப்பட்டுள்ள அனைத்து தொலைத் தொடர்புக் செயற்கைக் கோள்களின் மொத்தத் திறனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் வைஃவை வசதியைப் போல இச்செயற்கைக் கோள் வானில் இயங்கும் என கருதப்படுகிறது.

சீனாவிற்கு மாபெரும் பரப்பளவு உள்ளது. நிலவடிவம் அதிகமாகவும் சிக்கலாகவும் உள்ளது. குறிப்பாக, மலைப் பகுதி, பாலைவனம், புல்வெளிப் பகுதி, கடற்பரப்பு ஆகிய இடங்களில் தகவல் தொடர்புச் சேவை இன்னும் முழுமையாக் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், சமமற்ற பொருளாதார வளர்ச்சி நிலை, நிலவமைப்புச் சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளால், சில பகுதிகள் அகன்ற அலைவரிசை இணைய சேவையைப் பெறுவதில் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஸிஜியன்-13 புதிய செயற்கைக் கோள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சீனாவின் பெரும்பாலான நில மற்றும் கடல் பரப்புகள், இணைய சேவையில் இணைக்கப்படும். தரையில் நிலவும் தடைகள் இல்லாத நிலையில், இந்த செயற்கைக் கோளின் வழியாக, விரைவாக இணைய இணைப்பை உருவாக்க முடியும். அதோடு, வாகனம், கப்பல், விமானம், உயர்வேக தொடர்வண்டி போன்ற போக்குவரத்து வசதிகளுக்கும் இணையச் சேவை வழங்கும். அதோடு, குறைந்த செலவில் இணைய இணைப்பு ஆகிய மேம்பாடுகள் காணப்படும். இது குறித்து, ஸிஜியன்-13 செயற்கைக் கோளின் தலைமை வடிவமைப்பாளர் லியு ஃபாங் பேசுகையில்,

ஸிஜியன்-13 செயற்கைக் கோளில் வானும் நிலமும் ஒன்றாக இணைக்கப்படும் வடிவமைப்புக் கண்ணோட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நடமாடும் தொலைத் தொடர்பு வழங்குவது அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். தன்னியக்கமாக பின்தொடர்தல் மற்றும் கைப்பற்றுதல் என்ற செயல்பாடுகளின் மூலம், விமான மற்றும் தொடர்வண்டி போன்ற போக்குவரத்து வசதிகளில் உள்ள பயணிகளுக்கு இணைய சேவை வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தவிரவும், இச்செயற்கைக் கோள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அவசர நிலைத் தொலைத் தொடர்புக்காக அது மிகவும் முக்கியமாக பங்காற்றும். பல்வகை மீட்புதவிப் பணிகளுக்கு தகவல் தொடர்பு உத்தரவாதம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவின் தொலைத் தொடர்புச் செயற்கைக் கோளின் ஆய்வு, தயாரிப்பு மற்றும் பயன்பாடு ஆகியற்றில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், சீனாவின் செயற்கைக் கோளின் தொழில் நுட்ப நிலையும் செயற்கைக் கோள் தொடர்பான தொழில்களின் அளவும் இடைவெளியை எதிர்கொண்டுள்ளன. இதற்காக, தொலைத் தொடர்புச் செயற்கைக் கோள் தொழில் நுட்பங்களையும், அத்துறை தொடர்பான தொழிற்துறையின் வளர்ச்சியையும் சீனா மேலும் முன்னெடுக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040