சீன விண்வெளி ஆராய்ச்சி கூடத் தலைமையகத்தின் திட்டப்படி, டியன் சோ ஒன்று என்ற சரக்குப் போக்குவரத்து விண்வெளி விமானம், ஏப்ரல் 20ஆம் நாள், இரவு 7 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று விண்வெளிக்கு மனிதரை ஏற்றிச்செல்வதற்கான சீன விண்வெளித் திட்டப்பணியின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் மிகப் பெரிய விண்வெளி விமானம், இப்பறக்கும் கடமையில், பல தொழில் நுட்பங்களைச் சோதனை செய்து, சீன விண்வெளி திட்டப்பணிக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கும்.
டியன் சோ என்ற சரக்குப் போக்குவரத்து விண்வெளி விமானம், லாங்மார்ச் ஏழு என்ற சுமை ராக்கெட் ஆகியவை உருவாகிய அமைப்பு முறையின் முதல் கட்டப் பயன்பாடு இதுவாகும். அதோடு, இது, சீன விண்வெளி ஆராய்ச்சி கூடத்தின் கடைசியான கடமையும் ஆகும். சீன விண்வெளி நிலைய ஆக்கப்பணிக்கான தொழில் நுட்ப அடிப்படையை இப்பறக்கும் கடமை உருவாக்கும். இந்நிலையில் இப்பறக்கும் கடமை, நிறைய புதிய தொழில் நுட்ப சிக்கல்களை எதிர்நோக்குகின்றது.
இப்பறக்கும் கடமையில் பங்கேற்கும் லாங்மார்ச் ஏழு என்ற சுமை ராக்கெட், சரக்குப் போக்குவரத்து விண்வெளி விமானத்தைச் செலுத்தும் புதிய ரக நடு அளவான சுமை ராக்கெட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜுன் 25ஆம் நாள், இந்த ராக்கெட் ஹெய் நான் மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது குறித்து, சாங் செங் ஏழு என்ற சுமை ராக்கெட்டின் தலைமை வடிவமைப்பாளரின் துணையாளர் ஹு ஷியாவ் ஜுன் கூறியதாவது, சாங் செங் ஏழு என்ற சுமை ராக்கெட்டின் தொழில் நுட்பங்கள் பெருமளவில் முன்னேறியுள்ளன. இதனால் இப்பறக்கும் கடமை உறுதியாக வெற்றிபடையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார் அவர்.
டியன் சோ ஒன்று என்ற சரக்குப் போக்குவரத்து விண்வெளி விமானம் சீனாவின் முதல் சரக்கு போக்குவரத்து விண்வெளி விமானமாகும். 13 டன் எடையுடன் இவ்விமானம் 3 மாதங்களில் விண்வெளியில் பறக்கும் தன்மை கொண்டது.
டியன் சோ ஒன்று என்ற சரக்கு போக்குவரத்து விண்வெளி விமானம், சாங் செங் ஏழு என்ற சுமை ராக்கெட் தயாராக இருந்து, செலுத்தலை காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)