• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன்சௌ-1 விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவியது
  2017-04-20 20:27:10  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சரக்கு விண்கலமான தியன்சௌ-1 வியாழக்கிழமை மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வெற்றி, 2022ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ள சீனாவின் இலக்குக்கு முக்கிய படியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம், லாங் மார்ச்-7 ஒய்2 ராக்கெட் மூலம் விண்ணில் வென்செங் ஏவுமையத்திலிருந்து செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம், சுற்றுவட்டப் பாதையில் உள்ள தியன்கொங்-2 விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து, அதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் பிற பொருள்களை அளிக்க உள்ளது. தொடர்ந்து, விண்வெளி ஆய்வை மேற்கொள்ளும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040