• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் முக்கியத்துவம் பற்றி உலக வங்கியின் பாராட்டு
  2017-04-21 15:13:09  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு சீன அரசு மற்றும் உலக வங்கியைப் பொறுத்த வரை, அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. உலக வளர்ச்சியில் சீனாவின் கவனத்தை இந்த முன்மொழிவு காட்டுகிறது என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் 20ஆம் தேதி தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தின் துவக்கத்துக்கான செய்தியாளர்க் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், சீன அரசு மற்றும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியுடன் உலக வங்கி நெருங்கிய ஒத்துழைப்பு உறவை நிலைநிறுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பு உறவு மேலும் ஆழமாகும் என்றும் கூறினார்.

மே திங்களின் நடுப்பகுதியில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040