நடைபெறுகின்ற 7ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில், டியன் டான் என்ற பரிசுக்காக அதாவது இவ்விழாவின் கடைசி பரிசின் வேட்பாளராக, 15 திரைப்படங்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.
இவ்விழாவின் மிக முக்கிய பரிசான டின் டான் பரிசின் வேட்பாளர் பட்டியலில் 15 திரைப்படங்கள் உள்ளன. ஒரு குழந்தை என்ற பிரெஞ்சு திரைப்படம், அல்மா தெ சோத்பெத் என்ற பின்லாந்து திரைப்படம், டிம் தி ஃப்ளோரெசென்ட்ஸ் என்ற கனடா திரைப்படம் முதலிய வெளிநாட்டு திரைப்படங்களும், மிஸ்டர் நோ ப்ராப்ளம், மேய்கோங் நடவடிக்கை ஆகிய சீனத் திரைப்படங்களும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த 15 திரைப்படங்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று 7ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா அமைப்புக் குழுவின் துணை செயலர் ஹூ துங் அறிவித்தார்.
இப்போது வரை, 59 நாடுகளிலிருந்து வந்த 424 திரைப்படங்கள், இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளன. 5 சுற்று போட்டிகளுக்கு பிறகு, 18 நாடுகளிலிருந்து வந்த 15 திரைப்படங்கள் கடைசி கட்டத்தில் நுழைந்துள்ளன. இவற்றில் 13 வெளிநாட்டு திரைப்படங்களும் 2 சீன திரைப்படங்களும் அடங்குகின்றன என்றார் ஹூ துங்.
இவ்விழாவின் நடுவர் குழுவில் 7 பேர் அடங்குகின்றனர். உலகளவில் புகழ் பெற்ற டென்மார்க் இயக்குநர் பில்லி ஆகுஸ்ட், சீனாவின் புகழ் பெற்ற நடிகை ஜியாங் வென் லி, நட்சத்திர நடிகர் ஜீன் ரெனோ முதலியோர் இக்குழுவில் இருக்கின்றனர். நடுவர்கள், இந்த 15 திரைப்படங்களை முழுமையாக பார்த்து விட்டு, வாக்களித்து, மிக சிறந்த திரைப்படம், மிக சிறந்த இயக்குநர் முதலிய 10 பரிசுகளைத் தீர்மானிப்பர். நடுவர்கள் எல்லோரும், சரியான முறையில் மதிப்பிடுவர் என்று இந்நடுவர் குழுவின் தலைவர் பில்லி ஆகுஸ்ட் வாக்குறுதியளித்தார்.
கலைக்கு மதிப்பளிக்கும் கோட்பாட்டில், 15 திரைப்படங்களை எல்லா நடுவர்கள் பார்த்து, நேர்மையாக மனமார்ந்த முறையில் வாக்களிப்பர் என்றார் அவர்.
16ஆம் நாள் துவங்கிய இந்த திரைப்பட விழா, 23ஆம் நாளில் நிறைவடையும். கடைசியான 10 முக்கிய பரிசுகள், 23ஆம் நாளில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)