• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன்கொங்-2 மற்றும் தியன்சோ-1 ஒன்றிணைவது வெற்றி
  2017-04-22 14:39:11  cri எழுத்தின் அளவு:  A A A   

தியன்கொங்-இரண்டு மற்றும் தியன்சோ-ஒன்று ஆகிய இரண்டு விண்கலன்கள் 22ஆம் நாள் சனிக்கிழமை 12:23மணிக்கு தன்னியக்கமான முறையில் வெற்றிகரமாக ஒன்றிணைந்துள்ளன.

இந்த இரண்டு விண்கலன்கள் தன்னியக்கமாக இணைவது இதுவே முதல்முறையாகும். சீனா தயாரித்துள்ள மனிதரற்ற சரக்கு விண்கலம், விண்வெளி ஆய்வகத்துடன் இணைவது இதுவும் முதல்முறையாகும்.

தியன்சோ-ஒன்று, சீனாவின் முதலாவது சரக்கு விண்கப்பல் ஆகும். அது, கடந்த 20ஆம் நாள் இரவில் வென்சாங் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. தியன்கோங்-இரண்டு, சீனாவின் உண்மையான விண்வெளி ஆய்வு நிலையம் என கருதப்படுகிறது. அது, 2016 செப்டம்பர் 15ஆம் நாள் விண்ணில் செலுத்தப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040