கடந்த சில ஆண்டுகளாக, சீனாவும் ரஷியாவும் விண்வெளிப் பயணத் துறையில் சீரான ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன. இந்த விண்வெளிப் பயண புத்தாக்க ஒன்றியத்தில், 7 ரஷிய பல்கலைக்கழகங்கள் சேர்ந்துள்ளன. இது குறித்து, ரஷிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான மற்றும் விண்வெளிப் பயண ஆய்வுக் கருவிகள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கான்ஸ்டான்டைன் லோசெவ் கூறுகையில், எதிர்காலத்தில், இவ்வொன்றியத்தின் கட்டுக்கோப்புக்குள், சீனாவுடன் மேலும் ஆக்கப்பூர்வமான பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
2016-ஆம் ஆண்டில், சீனா மற்றும் ரஷிய அரசுகள், புற அண்டவெளி ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பப் பயன்பாட்டு பாதுகாப்பு விதிகளில் கையொப்பமிட்டன. விண்வெளிப் பயணத் துறையில் அதிகமான ஒத்துழைப்புகளை இது முன்னேற்றி வருகின்றது என்றார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை விண்வெளிப் பயண புத்தாக்க ஒன்றியத்தின் உருவாக்கமானது, சர்வதேச விண்வெளிப் பயணத் துறையில் உயர் கல்வி நிலையங்கள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் முதலியவை முழுமையாக தங்களது மேம்பாடுகளை வெளிப்படுத்துவதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவினால் உருவாக்கப்படும் வாய்ப்புகளைக் கூட்டாக அனுப்பவிப்பதை முன்னேற்றும். இந்த ஒன்றியத்தின் செயலகம், சீனாவின் வடமேற்கு தொழிற்துறை பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. விண்வெளிப் பயண புத்தாக்க ஒன்றியத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து, இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வாங் ஜின் சொங் கூறுகையில், முதலாவதாக, இந்த ஒன்றியத்தின் உட்புற ஒத்துழைப்பு நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு அமைப்புமுறைகளை முன்னேற்றி, வெகுவிரைவில் ஒன்றியத்தை சர்வதேச செல்வாக்குக்குரியதாக. இரண்டாவதாக, இவ்வொன்றியத்தின் பல்வேறு உறுப்புகள் தங்களது மேம்பாடுகளை வெளிப்படுத்தி, பல்வேறு பிரதேசங்களின் தேசிய இன மற்றும் பண்பாட்டு தனிச்சிறப்புகளைப் பயன்படுத்தி, பல்வகை தனிச்சிறப்புடைய பண்பாட்டுப் பரிமாற்ற மையங்களை நிறுவ வேண்டும். மூன்றாவது, அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்புத் திட்டங்களின் மூலம், தொழில் நுட்பம், பண்பாட்டுப் பரிமாற்றம், பணியாளர் பயிற்சி முதலிய துறைகளில் ஆழமான ஒத்துழைப்பு முன்னேற்ற வேண்டும் என்று கூறினார்.