• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தகவல் பட்டுப்பாதையில் சீன டெலிகாம் குழுமத்தின் முதலீடு
  2017-04-25 13:56:32  cri எழுத்தின் அளவு:  A A A   
அடுத்த 5 ஆண்டுகளில், தகவல் பட்டுப்பாதையின் கட்டுமானத்தில் சீன டெலிகாம் குழுமம் குறைந்தது 100 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்ய உள்ளது. தவிர, 10 ஆண்டுகள் நீடிக்கும் கட்டுமானத்தின் மூலம், இவ்வாண்டு சீன-பாகிஸ்தான் தகவல் பாதைக்கு சாரம்ச ரீதியான முன்னேற்றம் கிடைக்க உள்ளது. 24ஆம் நாள் சீன டெலிகாம் குழுமத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.

சீன டெலிகாம் குழுமத்தின் பார்வையில், தகவல் செய்தித் தொடர்புத் துறை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைச் செயல்படுத்தும் அடிப்படை தொழிற்துறையாகும். தற்போது, இம்முன்மொழிவில் முன்வைக்கப்பட்டுள்ள 11 நெடுநோக்கு அலைவரிசைகள், 3 மண்டலங்களைச் சேர்ந்த 12 அலைவரிசைகள் ஆகியவை, சீன டெலிகாம் குழுமத்தின் அலைவரிசையில் பரவியுள்ளன. இவற்றில் சீன-லாவோஸ்-தாய்லாந்து அலைவரிசை, சீன-பாகிஸ்தான் தகவல் பாதை, பட்டுப்பாதை ஒளிவடம், சீன-மியன்மார்-வங்காளதேச-இந்திய அலைவரிசை ஆகியவை, 4 முக்கியமான வழிகாட்டல் திட்டப்பணிகளாக முன்னேற்றப்படும். 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், இந்த அலைவரிசைகள் முழுமையாக திறந்து வைக்கப்படவுள்ளன.

லாவோஸ் மற்றும் தாய்லாந்தின் தகவல் கூட்டு நிறுவனங்களுடன் சீன டெலிகாம் கூட்டு நிறுவனம் ஒத்துழைத்து கட்டியமைத்த, சீன-லாவோஸ்-தாய்லாந்து அலைவரிசை தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் தொடரும் கட்டுமானத்தின் மூலம், சீன-பாகிஸ்தான் தகவல் பாதை, இவ்வாண்டு சாரம்ச ரீதியான முன்னேற்றம் அடைய உள்ளது என்று சீன டெலிகாம் சர்வதேசக் கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் டேங்சியாவ்ஃபேங் அறிமுகப்படுத்தினார்.

மேற்கூறிய 4 முக்கிய திட்டப்பணிகளில், பட்டுப்பாதை ஒளிவடம், மத்திய ஆசியா, தெற்காசியா, மேற்காசியா முதலியவற்றைக் கடந்த பல தரப்புத் தரை ஒளிவடத்தின் ஒத்துழைப்புத் திட்டப்பணியாகும். சீன-மியன்மார்-வங்காளதேச-இந்திய அலைவரிசை, மியன்மாரை மையப் பகுதியாகக் கொண்டு, வங்காளதேசம் மற்றும் இந்தியாவை இணைக்கும் அலைவரிசையாக திகழ்கிறது. இந்த 4 அலைவரிசைகள் கட்டியமைக்கப்பட்டப் பின், நாட்டைக் கடந்து தொலைத்தொடர்பில் நெடுகிலுள்ள இந்த நாடுகளின் இன்னல்கள் சாரம்ச ரீதியான முறையில் தீர்க்கப்பட உள்ளன. நெடுகிலுள்ள நாடுகள், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பில் பங்கெடுப்பதற்குத் தகவல் அடிப்படையை இவை உருவாக்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040