• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார கட்டமைப்புச் சீர்திருத்தத்தை உறுதியாக முன்னெடுக்க வலியுறுத்தல்
  2017-04-25 18:24:56  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரப் பணிகள் தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 25ஆம் நாள் செவ்வாய்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தியது.

இவ்வாண்டு முதல் காலாண்டில் பொருளாதாரம் சீராக வளர்ந்து வந்துள்ளது. ஒரு நல்ல துவக்க நிலை காணப்பட்டுள்ளது. அதேசமயத்தில், பல அறைகூவல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. புதிய வளர்ச்சி நிலை என்ற கருத்தைக் கடைபிடித்து பொருளாதார நிலையை ஆய்வு செய்து, பொருளாதார கட்டமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாடு தொடர்பான பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் நிலையில், பொது மக்கள் மேலதிக நலன்களை பெற செய்ய வேண்டும். சீரான சந்தைச் சூழ்நிலையை உருவாக்கி, முறைமை முழுமைப்படுத்தி, வெளிநாட்டுத் திறப்புக்கான துறைகளை விரிவாக்கி, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தும் வகையில் முயற்சி எடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040