ஏப்ரல் திங்கள் 26-ஆம் நாள், உலக அறிவுசார் சொத்துரிமை தினமாகும்.சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, நீண்டகால வளர்ச்சி மூலம் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், பதிப்புரிமை ஊறுபாடு, வணிக சின்னம் மீறல், உரிமை நலனைப் பேணிக்காத்தல் முதலிய முனைப்பான பிரச்சினைகள் இன்னும் இருக்கிறன.
தற்போது, "மக்களின் சார்பில்('In the Name of People')"என்ற ஊழல் ஒழிப்பு தொடர்பான தொலைக்காட்சி நாடகம் சீனாவின் தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இந்நாடகம் முன்னதாகவே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது, தீய நோக்கத்துடன் இந்நாடகத்தின் சொத்துரிமையை மீறிய செயலாகும். இது, சீனாவில் பெருமளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசியப் பதிப்புரிமைப் பணியகத்தைச் சேர்ந்த நிர்வாக துறைத் தலைவர் யூ சிக் இது குறித்து கூறுகையில், இந்த செயல், சீனாவின் படைப்புரிமையில் ஊறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். இந்நிலைமையில், சீனத் தேசியப் பதிப்புரிமைப் பணியகம் இச்செயலைத் தடுத்து தண்டனை விதித்துள்ளது.
இணையம் விரைவாக வளரும் நிலைமையில் சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புத் துறையில் நிலவுகின்ற இன்னல்களை, நாடகத்தின் சொத்துரிமை மீறிய நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. அதோடு, சொத்துரிமை மீறல் செயலைச் சீன அரசு கடுமையாக ஒடுக்கும் நிலையான மனப்பான்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தலைவர் ஷென் சாங்யூ கூறுகையில், கடந்த ஆண்டுகளில், சீனாவின் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு ஆற்றல் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது. குறிப்பாக, அறிவுசார் காப்புரிமைச் சட்டம், படைப்புரிமைச் சட்டம் முதலியவற்றை பிரதிநிதியாக கொண்ட சட்ட அமைப்புமுறை நிதானமாக முன்னேறி வருகின்றது. அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புத் துறையிலுள்ள இன்னல்களைத் தீர்க்க இது பெருமளவில் துணைபுரியும் என்றார். அறிவுசார் காப்புரிமைச் சட்டத்தின் திருத்தப்பணி, 2017-ஆம் ஆண்டு சீன அரசவையின் சட்டமியற்றல் பணியில் முக்கிய அம்சங்களில் வைக்கப்பட்டுள்ளது. கெட்ட நோக்கத்துடன் கூடிய அறிவுசார் சொத்துரிமை மீறல் நடவடிக்கைக்கு தண்டனைத் தன்மை வாய்ந்த ஈட்டு தொகை பெரிதும் அதிகரிக்கும் என்று ஷென் சாங்யூ தெரிவித்தார்.
தவிர, கடந்த ஆண்டுகளில், சீனாவின் அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம் சீராக வளர்ந்து வருகின்றது. 2016-ஆம் ஆண்டில், கண்டுபிடிப்பு தொடர்பான அறிவுசார் காப்புரிமைக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 13இலட்சத்து 39ஆயிரத்தை எட்டியது. 2015-ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 21.5விழுக்காடு அதிகமாகும். சர்வதேச அறிவுசார் சொத்துரிமைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 40ஆயிரத்தை எட்டியது. மேலும், சீனாவின் வணிக சின்னத்துக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக சின்னங்களின் எண்ணிக்கையும் 15 ஆண்டுகளாக தொடர்ந்து உலகில் முதல் இடம் வகித்து வருகிறது.