• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றிய புதிய புள்ளிவிபரங்கள்
  2017-04-27 18:22:13  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் காலாண்டில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றிய புள்ளிவிபரங்களை சீன வணிக அமைச்சகம் 27ஆம் நாள் வெளியிட்டது. அதன்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவுக்கும் இத்திட்டப்பணி நெடுகிலுள்ள நாடுகளுக்கும் இடையிலான சரக்கு வர்த்தகத் தொகை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 26 விழுக்காட்டுக்கு மேல் அதிகமாகும். இதில் சீனாவின் ஏற்றுமதி தொகை 90 ஆயிரம் கோடி யுவானுக்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில், இரு தரப்பு முதலீடு மற்றும் ஒத்துழைப்பு துறையும் சீராக வளர்ந்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள 43 நாடுகளிலுள்ள நிதித் துறையைச் சாராத நிறுவனங்களில் சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை சுமார் 300 கோடி அமெரிக்க டாலராகும். 61 நாடுகளுடன் 952 கட்டுமான உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது. அதேவேளையில், சீனாவில் இந்த நாடுகளின் முதலீட்டுடன் புதிதாக கட்டியமைக்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 781 ஆகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 40 விழுக்காடு அதிகமாகும். அவற்றுக்கான வெளிநாட்டு முதலீட்டுத் தொகை 850 கோடி யுவானாகும்.
மேலும், முக்கிய அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துடன், சீனாவின் தயாரிப்பு, சீனவின் கட்டுமானம், சீனாவின் சேவை ஆகியவை மேலும் அதிகமான நாடுகளின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
எடுத்துக்காட்டாக, இவ்வாணடின் மார்ச் திங்களில், தாராள வர்த்தகம் பற்றிய சீனாவுக்கும் மாலத் தீவுக்கும் இடையிலான 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்துள்ளது. சீன-பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் மற்றும் வர்த்தக இணைப்பு ஆணையத்தின் 28ஆவது கூட்டம் நடைபெற்றது. 6 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 19ஆம் நாள் முதல், 21ஆம் நாள் வரை, சீனா-ஐரோப்பிய ஆசிய பொருளாதார ஒன்றியத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பான 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040