பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21-ஆவது நூற்றாண்டு கடல்வழிப் பாட்டுப் பாதை என்ற முன்மொழிவு பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உச்சி கருத்தரங்கு மே திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. ஒரு மண்டலம் ஒரு பாதையின் கட்டுமானம் சீராக முன்னேறி வருவதுடன், சீனாவின் ஹாங்சோ நகரில் அணைந்துள்ள அலிபாபா குழுமம் eWTPஇன் வளர்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.
eWTP என அழைக்கப்படும் உலக மின்னணு வணிக அலுவல் மேடை, அலிபாபா குழுமத்தின் தலைவர் மா யுன்(ஜாக் மா), 2016-ஆம் ஆண்டில் முன்வைத்த ஒரு கருத்தாக்கம் ஆகும். இது, ஜி20 அமைப்பின் ஹாங்சோ உச்சிமாநாட்டின் பொது அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. உள்ளபடியே கூறினால், எண்ணியல் பட்டுப்பாதை ஒன்றைக் கட்டியமைக்க வேண்டும். எண்ணியல் மைய மண்டலங்கள் பலவற்றால் இணைக்கப்படும் எண்ணியல் பட்டுப்பாதை, உலகின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக சேவையில் பங்கெடுக்க சேவை வழங்கும்.
அலிபாபா குழுமத்தின் CEO அலுவலகத்தின் தலைமை அதிகாரி சொங் ஜின்டாவ் கூறுகையில், அலிபாபா குழுமம் இணையத் துறையில், குறிப்பாக பெரிய தரவுத் தொழில் துறையில் மேம்பாடுகளைப் பெற்றுள்ளது. இது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின்படி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒருமுறை நடைமுறையாக்கமாகும் என்றார்.
eWTP தொடர்பான முதலாவது எண்ணியல் மைய மண்டலம், இவ்வாண்டின் மார்ச் திங்கள் மலேசியாவில் கட்டிமுடிக்கப்பட்டது. அந்நாட்டின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச மேல்நிலை சரக்குப் புழக்க மையம் இதுவாகும். மலேசியாவின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு, சரக்குப் புழக்கம், பண்டசாலை சேமிப்பு, சுங்க நடைமுறை, வர்த்தகம், நிதி உள்ளிட்ட தொடர் சேவைகளை இம்மையம் வழங்கும். மேலும், எண்ணியல் மைய மண்டலம், அலிபாபா குழுமத்தின் அலி மேகம் மற்றும் பெரிய தரவு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, மலேசியாவின் உள்ளூர் சுய தொழில் நினுவனங்களுக்கு ஆதரவு அளித்து, தொடர்புடைய திறமைசாலிகளைப் பயிற்றுவித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில், இதர எண்ணியல் மைய மண்டலங்களை உருவாக்கும்போது, இத்தகைய மாதிரி மேற்கொள்ளப்பட வேண்டும் என அலிபாபா விரும்புவதாக சொங் ஜின்டாவ் தெரிவித்தார்.
தவிர, சீனாவில் முதலாவது eWTP எண்ணியல் மைய மண்டலமும் ஹாங்சோ நகரில் கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு, eWTPஇன் கட்டுமானம், சில நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. தொடர்புடைய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறன. இவ்வாண்டில் குறைந்தது மூன்று எண்ணியல் மைய மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று சொங் ஜின்டாவ் தெரிவித்தார்.