ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சித் திட்டத்தின் நடைமுறையாக்கத்துக்கு தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பின் தலைமை இயக்குநர் லீ யுங் அண்மையில் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம், வறுமை ஒழிப்பதாகும். வறுமை ஒழிப்பதற்கு, பொருளாதார வளர்ச்சி மிக பயனுள்ள வழியாகும். இந்த முன்னேற்றப் போக்கில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற சீனாவின் முன்மொழிவு, ஐ.நா.வின் இத்திட்டத்தின் நடைமுறையாக்கத்துக்கு வலுவான உந்து சக்தியை அளிக்கும் என்று லீ யுங் சுட்டிக்காட்டினர்.
2008ம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, உலகப் பொருளாதார வளர்ச்சியில் பல அறைகூவல்கள் தோன்றியுள்ளன. வர்த்தகம், முதலீடு, நிதி ஆகிய துறைகளில் குறிப்பிட்ட அளவிலான பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, உலக வர்த்தக வளர்ச்சியை முன்னுக்குக் கொண்டு வருவதாகவும், உலக நிதி நெருக்கடியின் சில பாதிப்புக்களைக் குறைத்து, புதிய வளர்ச்சிப் பாதையைத் திறந்து வைப்பதாகவும், லீயுங் தெரிவித்தார்.