• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இளைஞர்களுக்கு வேலை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
  2017-05-04 15:01:53  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தலைப்பிலான மன்றக் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இந்த முன்மொழிவு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை நடைபெறும் மிகப் பெரிய அளவிலான சர்வதேச மாநாடு இதுவாகும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம் குறித்து பாகிஸ்தான் தேசிய இளைஞர் சங்கத்தின் தலைவர் ஹன்னன் அலி அப்பாஸி, இளைஞர்களின் கோணத்தில் இருந்து தனது கவனங்களையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்தார்.

அவர் எமது செய்தியாளரிடம் பேட்டி அளித்தபோது பேசுகையில்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் கட்டுக்கோப்புக்குள் உள்ள சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக் கட்டுமானமானது, பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை திறந்து வைத்துள்ளது. பாகிஸ்தான் இளைஞர்கள் இதில் இருந்து பயன் பெறுவர் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

பாகிஸ்தானின் மக்கள் தொகையில், இளைஞர்கள் 63விழுக்காடு உள்ளனர். சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை முன்னேற்றமடைந்து வருவதுடன், இரு நாடுகளுக்கிடையே வர்த்தக பரிமாற்றமும் அதிகரித்து வருகிறது. இதில், பாகிஸ்தான் இளைஞர்கள் மேலதிக வேலை மற்றும் வளர்ச்சி வாய்ப்புக்களை பெறுவார்கள். இந்த பொருளாதார பாதை, இரு நாடுகளை இணைக்கும் வழியாக இருப்போது மட்டுமல்லமால், அடிப்படை வசதிக் கட்டுமானம், எரிசக்தி ஒத்துழைப்பு, தடையற்ற வர்த்தக மண்டலம் ஆகிய பல துறைகளில் ஒத்துழைப்புகள் மேற்கொள்வதற்கான வழியாகவும் உள்ளது. இதனால், பொதுவான வளர்ச்சி மற்றும் செழுமை அடையும் ஒத்துழைப்புப் பாதை அதுவாகும். சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக் கட்டுமானம், பாகிஸ்தானுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதவை திறந்து, பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சியை புதிய காலத்திற்கு கொண்டு வரும்.

எதிர்காலத்தில் வாயப்புகளையும் அறைகூவல்களையும் எதிர்கொள்ளும் வகையில், பாகிஸ்தான் இளைஞர்கள் அறிவு மற்றும் தொழில் நுட்ப ரீதியான திறன்களை மேம்படுத்தி வருகின்றனர். தற்போது, சீன மொழியை கற்பது என்பது, பாகிஸ்தான் மாணவர்களின் முக்கியத் தேர்வுகளில் ஒன்றாகும் என்று அப்பாஸி சுட்டிக்காட்டினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற சீனாவின் முன்மொழிவினால், சீனா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகியவை இணைக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், இத்திட்டம், பிரதேச மற்றும் உலகின் அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகிய இலக்குகளை அடைவதற்கான இலட்சியமாகும். பல்வேறு நாடுகளின் பொருளாதார செழுமை மற்றும் பிரதேச பொருளாதார ஒத்துழைப்பு ஆழமாகி வருவதுடன், வெவ்வெறு நாகரிகங்களுக்கிடையேயான பரிமாற்றமும் அதிகரித்து வருகிறது. இந்த முன்னேற்றப் போக்கில், முதலில், பல்வேறு நாடுகளின் இளைஞர்களே நன்மை பெறுவர்கள் என்று அப்பாஸி கருத்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040