ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி, பயன் தரும் ஒத்துழைப்பு அமைப்பு முறையாகும். இப்பிரதேசத்திலுள்ள வளரும் நாடுகளுக்கு முக்கிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி, உலகமயமாக்க வளர்ச்சிக்கு இது துணை புரியும் என்று சீனாவுக்கு வருகை தந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ள உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் பொது செயலர் ஃப்ரான்சிஸ் காரி நமது செய்தியாளருக்கு தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி முன்மொழிவு மிக முக்கியமானது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உச்ச நிலை கருத்தரங்கு முக்கியமான சீரான மேடையாக உள்ளது என்று காரி கூறியது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் நடைமுறையாக்கத்திற்கு இக்கருத்தரங்கு மிக முக்கியமானது. முன்னர் செய்த முயற்சிகள் குறித்து நாங்கள் மதிப்பீடு செய்து, எதிர்காலத்தை திட்டமிடலாம் என்றார் அவர்.
இவ்வாக்கப்பணி முன்மொழிந்த ஒத்துழைப்பு வழிமுறை மிக சிறந்தது. இது வேறு வர்த்தக உடன்படிக்கைக்கு வேறுபட்டது. இவ்வாக்கப்பணி, இப்பிரதேசத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான தொடர்பை அதிகரித்து, வர்த்தக ஒத்துழைப்புக்கான ஆற்றலை வலுப்படுத்தும். இந்த அடிப்படையில், வர்த்தக ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும். பயன் தரும் ஒத்துழைப்பு வழிமுறை இதுவாகும். இப்பிரதேசத்திலுள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத்தை உருவாகும் ஆற்றலை இது வலுப்படுத்தும் என்று காரி கூறினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியில் கலந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். தற்போதைய சர்வதேச உடன்படிக்கை மற்றும் கட்டுக்கோப்பிலுள்ள ஒத்துழைப்பை, இவ்வாக்கப்பணி வலுப்படுத்தும். இது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்புக்கு வாய்ப்பு ஒன்றாகும் என்றார் அவர்.
தற்போது உலக நிலைமை குழப்பமானதும் சிக்கலானதும். பல்வேறு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு சிக்கலானது. தொழில் நுட்பம், வளர்ச்சி நிலைமை ஆகியவற்றில், பல்வேறு நாடுகளுக்கிடையிலான இடைவெளி அதிகம். இதனால், பிரதேசத்திலும் உலகிலும் பல்வகை ஒத்துழைப்புகள் தோன்றின. புவியமைவு, வரலாறு, மொழி பண்பாடு ஆகிய காரணிகளால், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பிரதேசத்திலுள்ள நாடுகள், ஒன்று கூடின.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் மேலும் இணக்கமாக ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் முறையில் வளர்க்க செய்யும் என்று காரி கூறினார்.
(கலைமணி)