மே 13 முதல் 15ஆம் நாள் வரை, ஐ.நா தலைமை செயலர் அன்டோனீயோ குட்ரேஸ், சீனாவில் பயணம் மேற்கொண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வார். ஐ.நா தலைமை செயலராக பதவி ஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம், இதுவாகும். சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி, உலக வளர்ச்சிக்கு சீன திட்டத்தை ஆலோசித்து, உலகமயமாக்க பிரச்சினையை தீர்ப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும் இவ்வாக்கப்பணி துணை புரியும் என்று மே 8ஆம் நாள், ஐ.நா தலைமையகத்தில் சீன செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது அவர் தெரிவித்தார்.
அழைப்பை ஏற்று, பெய்ஜிங்கிற்கு வந்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வதை அவர் ஆவலுடன் எதிர்பார்கிறார்.
உலகமயமாக்க பிரச்சினையை தீர்ப்பதற்கும், சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
ஆக்கப்பணி முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச வளர்ச்சிக்கு கடமை ஆற்றுவதற்கு சீனா மேற்கொண்ட நடவடிக்கை, இதுவாகும். இக்கருத்தரங்கில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குட்ரேஸ் கூறினார்.
இந்த சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கு, சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியை சீராக வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார்.
இக்கருத்தரங்கில், கலந்துகொள்பவர்கள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் அனைத்து திட்டப்பணிகள் குறித்தும் அறிந்து கொள்ள இயலும். இந்த திட்டப்பணிகள், குறிப்பாக, சில அடிப்படை வசதி கட்டுமானத் திட்டப்பணிகள், உலகின் பல்வேறு இடங்களுக்கிடையிலான இணைப்புக்குத் துணை புரியும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் பயனையும் உலகமயமாக்க வளர்ச்சியையும் பற்றி விவாதிக்கும் வாய்ப்பை கலந்துகொண்டவர்கள் அனைவரும் இக்கருத்தரங்கின் மூலம் பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, உலகமயமாக்க வளர்ச்சியையும் சர்வதேச தாராள வர்த்தகத்தையும் குறித்து ஐயம் தெரிவிக்கும் கருத்துகள் அதிகம் உலவுகிறது. இந்நிலைமையில், சீனா நடத்தும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கு, உலகமயமாக்க வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். உலகமயமாக்கம், அனைவருக்கும் நலன் தரும் என்பதை சீனா நடத்தும் இக்கருத்தரங்கு மூலம் பொது மக்கள் அறிந்து கொள்வர் என்று இப்பேட்டியில் குட்ரேஸ் கூறினார்.
(கலைமணி)