அம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கையின் தென் முறையில் அமைந்துள்ளது. இந்திய பெருங்கடலிலுள்ள கப்பல் போக்கவரத்து வழிக்கு 10 கடல் மைல் தொலைவில் இது உள்ளது. 2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய பெருங்கடல் சுனாமியால், இந்த சிறிய ஊர் கடுமையாக பாதிக்கப்பட்டது. சீரமைப்புப் பணியிலிருந்து, அம்பாந்தோட்டை ஆக்கப்பணி வரை, கடந்த 13 ஆண்டுகாலத்தில், சீன பொறியியலாளர் ஒருவர், இங்கே உறுதுணையாக நின்று வருகின்றார். இவர் சியா லின் தான். 63 வயதான, அவர்சீன துறைமுக ஆக்கப்பணி தொழில் நிறுவனத்தின் பொறியியலாளர் ஆவார்.
2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமியால், அம்பாந்தோட்டை உள்ளிட்ட இலங்கையின் தென் பகுதி, கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது, இலங்கை அரசுக்கு பணப்பற்றாக்குறை மற்றும் மீட்புதவிகள் இயலாமல் போனது. மீட்புதவி பணியில் பங்கு ஆற்றிய முதல் வெளிநாட்டு தொழில் நிறுவனம், சீனாவின் துறைமுக தொழில் நிறுவனமாகும்.
2005ஆம் ஆண்டு, சியா லின் பங்காற்றிய சீன துறைமுக தொழில் நிறுவனம், மீட்புதவி பணியை நிறைவேற்றியது. இலங்கை பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், இலங்கை தென் பகுதியிலுள்ள அம்பாந்தோட்டை நகரத்தை, இலங்கை தொழில் தளமாக உருவாக்க இலங்கை அரசு திட்டமிட்டது. அம்பாந்தோட்டை துறைமுக திட்டப்பணிக்கு சீன துறைமுக தொழில் நிறுவனம் பொறுப்பு ஏற்பதற்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது.
நியாயமான வடிவமைப்பு மற்றும் பணச் சேமிப்பு வழிமுறையின் மூலம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியமைப்பதை சீன துறைமுக தொழில் நிறுவனத்தின் தலைமை பொறியியலாளர் சியா லின் திட்டமிட்டார். திட்டப்பணியின் தரத்தை உத்தரவாதம் செய்வதோடு, இயற்கை சுற்றுச்சூழலை பேணிக்காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சியா லின் வலியுறுத்தினார். தொடரவல்ல வளர்ச்சி கோணத்திலிருந்து, இத்துறைமுகத்தை வடிவமைப்பது, உள்ளூர் மக்களுக்கு சீன தொழில் நிறுவனத்தின் நல்ல எண்ணம் புரியும் என்று அவர் கருதினார்.
திட்டப்பணியில் கவனம் செலுத்தியதோடு, இலங்கை பணியாளர்களின் திறன் வளர்ச்சிக்கு துணை புரிய சியா லின் விரும்பினார். இத்திட்டப்பணியின் 7 பணியாளர்களில், 6 இலங்கை பணியாளர்கள் உள்ளனர். இலங்கை பொது மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை இத்திட்டப்பணி வழங்கியது.
2011ஆம் ஆண்டு, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் கட்ட திட்டப்பணி, முடிவடைந்தது. 2016ஆம் ஆண்டு, முதல் கட்ட திட்டப்பணி, முழுமையாக பயன்பாட்டுக்கு வர துவங்கியது. தற்போது இத்துறைமுகத்தின் 2வது கட்ட திட்டப்பணி அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் டன் சரக்கு பொருட்களை ஏற்றிசெல்லும் திறனுடைய 8 கப்பல் துறைகள், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமைக்கப்படும். இத்துறைமுகத்தை அடிப்படையாக கொண்ட தொழில் பூங்கா கட்டியமைக்கப்பட துவங்கியுள்ளது.
(கலைமணி)