நேபாளத்தின் துணைத் தலைமை அமைச்சரும் நிதி அமைச்சருமான கிருஷ்ணா பகதூர் மஹாரா 10ஆம் நாள் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கான புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிடுவதை நேபாளம் எதிர்ப்பார்த்துள்ளது என்றும், இந்த முன்மொழிவு நேபாள மக்களுக்கு நன்மை தரும் என்றும் தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த இந்த முன்மொழிவு, சீனாவின் சொந்த வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கும் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவில் பங்கெடுப்பது நேபாள அரசு மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.(வான்மதி)