• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்புக் கருத்தரங்கின் உயர்நிலைக் கூட்டத்துக்கான ஆயத்த பணி
  2017-05-11 16:51:10  cri எழுத்தின் அளவு:  A A A   
மே 14ஆம் நாள் முற்பகல், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்புக் கருத்தரங்கு துவங்கிய பின், உயர்நிலை முழு அமர்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 10ஆம் நாள் அறிவித்தது. இக்கூட்டம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆர்வத்துடன் வரவேற்கப்படுகிறது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேலான விருந்தினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் 850க்கும் மேலான வெளிநாட்டு விருந்தினர்கள், 130க்கும் மேலான நாடுகள் மற்றும் 70க்கும் மேலான சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாவர். அடிப்படை வசதிகள், தொழில் முதலீடு, வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, எரியாற்றல் மூலவளம், நாணய ஒத்துழைப்பு, மானிடப் பண்பாடு, உயிரின வாழ்க்கைச் சூழல், கடல்வழி ஒத்துழைப்பு ஆகிய 8 துறைகள் பற்றி, அவர்கள் விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர் என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் வாங்சியாவ்டாவ் தெரிவித்தார்.

போக்குவரத்து, எரியாற்றல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளிலான புரிந்துணர்வு குறிப்பாணை, ஒத்துழைப்பு நெறிவரைபடம், ஒத்துழைப்பு விருப்ப பத்திரம், ஒத்துழைப்புத் திட்டப்பணி முதலியவை இக்கூட்டத்தின் போது கையொப்பமிடப்படவுள்ளன. இவை, ஒத்துழைப்பு திட்டப்பணிகளின் நடைமுறையாக்கத்தை விரைவுப்படுத்தும் என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் அடிப்படைத் தொழில் பிரிவின் தலைவர் ஃபேய்சீழோங் கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், பல முக்கிய சாதனைகள் காணப்பட்டுள்ளன. பல்வேறு தரப்புகள், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய வழிமுறையாக இது மாறியுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான பொதுக் கருத்தும் விரிவான முறையில் உருவாகியுள்ளது. வாங்சியாவ்டாவ் பேசுகையில், இந்தக் கருத்தரங்கை வாய்ப்பாகக் கொண்டு, மேலும் திறந்த, பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மேடையை உருவாக்க வேண்டும். விரிவான கலந்தாலோசனை, கூட்டுப் பங்களிப்பு மற்றும் பயன்களின் பகிர்வு என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, மேலும் நெருக்கமான, வலிமையான கூட்டுறவு பிணையத்தை உருவாக்க வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி என்ற கருத்தின் வழிகாட்டலில், மேலும் நியாயமான, சீரான உலக நிர்வாக முறைமையை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்று சீனா விரும்புவதாக வாங்சியாவ்டாவ் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040