குறிப்பாக பொருள்கள் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றின் முனையமாக குவங்டொங்கின் தலைநகர் குவங்சோ விளங்குகிறது. இந்நகரில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், சமீபத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை குவங்சோவில் நடத்தியபோது, குவங்டொங் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் சைலஸ் தங்கல், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சீன வானொலிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் குவங்சோவின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
அவர் கூறும்போது, தேசிய அளவில் குவங்சோவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சிறப்பான இடத்தை வகிக்கிறது என சுட்டிக்காட்டினார்.
ஒருநாட்டில் வர்த்தகம் செய்யும்போது அந்நாட்டின் மக்கள், கலாசாரம் ஆகியவற்றை அறிந்து கொள்வது அவசியம். இந்தக் கருத்தை, தங்கலும் எதிரொலித்தார்.
சீனாவுடன் வர்த்தகம் புரிய விரும்பும் இந்தியர்கள், சிறந்த நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். அத்துடன், யாருடன் வர்த்தகம் புரிகிறோமோ அவர்களுடன் நல்லுறவு பாராட்டுவது முக்கியத்துவம். மேலும், உள்நாட்டு கலாசாரத்துடன் ஒன்றிணைவது வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.