• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக பொருளாதாரத்தின் புதிய ரக இயந்திரம்
  2017-05-12 16:01:37  cri எழுத்தின் அளவு:  A A A   

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்புக் கருத்தரங்கு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. தற்போது உலகமயமாக்கப் போக்கு, பாதுகாப்புவாதம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளது. புதிய ரக உலகமயமாக்கத்தை உருவாக்கும் இயந்திரமாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மாற கூடும் என்று சீனாவிலுள்ள இலங்கை தூதர் கருணசேனா கொடிதுவக்கு 9ஆம் நாள் தெரிவித்தார்.

உலகமயமாக்கம், உலக பொருளாதார்த்தை முன்னேற்றி வருகின்றது. ஆனால், இவ்வமைப்பு முறையில், வளரும் நாடுகள், பின்னிலையில் உள்ளன. மேலும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்துள்ளது. அடிப்படை வசதிகள், உற்பத்தி ஆற்றலின் பற்றாக்குறை ஆகியவை இதன் காரணிகளாகும். வளரும் நாடான சீனா முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி, வளரும் பல்வேறு நாடுகளுக்கு வாய்ப்பை வினியோகிக்கும் என்று கொடிதுவக்கு கருத்து தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணி கட்டுக்கோப்பிலுள்ள சீன-இலங்கை ஒத்துழைப்பு, புதிய ரக ஒத்துழைப்பின் மாதிரியாக மாறக் கூடும். இலங்கை வளர்ச்சியின் நெடுநோக்குக்கு இம்முன்மொழிவு பொருந்தியுள்ளது. இம்முன்மொழிவில் இலங்கை அரசு உயர்வாகக் கவனம் செலுத்தி வருகின்றது என்று கொடிதுவக்கு தெரிவித்தார்.

இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கையின் நிலவியல் நன்றாக உள்ளது. இப்பகுதியின் சரக்கு போக்குவரத்து, தகவல், சேவை ஆகியவற்றின் பரிமாற்ற மையமாக மாறக் கூடும். இதனால், உலகமயமாக்கத்துக்கு இலங்கை அரசு ஆதரவளிக்கிறது. உலகமயமாக்கத்துக்குத் துணை புரியும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கீழ், சீன அரசுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை அரசு விரும்புகிறது என்று கொடிதுவக்கு தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு கட்டுக்கோப்பை உருவாக்கியது. இக்கட்டுக்கோப்பில், அடிப்படை வசதி ஆக்கப்பணி, பொருளாதார வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளின் ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்படலாம். இக்கட்டுக்கோப்பிலுள்ள சர்வதேச ஒத்துழைப்பிலிருந்து, இலங்கை அரசு நிறைய பலன்களை பெறும் என்று கொடிதுவக்கு கருத்து தெரிவித்தார்.
அடிப்படை வசதி ஆக்கப்பணியின் மூலம், பொருளாதாரத்தை முன்னேற்றுவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் முக்கியப் பகுதியாகும். மேலும் வசதியான போக்குவரத்தும், மேலும் அதிகமான எரியாற்றலும், இப்பிரதேசத்திலுள்ள நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையாகும் என்று கொடிதுவக்கு கூறினார்.

இவ்வாண்டில், தாராள வர்த்தக உடன்படிக்கையில் சீனா இலங்கை இரு நாடுகள் கையொப்பமிடக் கூடும். இத்தாராள வர்த்தக உடன்படிக்கையும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவும் இரு நாட்டு வர்த்தகத்துக்கு துணை புரியும் என்று அவர் தெரிவித்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040