• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய வளர்ச்சியில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் பங்கு
  2017-05-12 16:36:36  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி இந்தியப் பொருளியலாளர் திரு. வேணுகோபால் தன்னுடைய கருத்தைச் சீனவானொலித் தமிழ்ப் பிரிவிடம் பகிர்ந்து கொண்டார்.

நடப்பு நூற்றாண்டு என்பது ஆசியாவின் நூற்றாண்டு என்னும் கருத்து பரவலாக நிலவி வருகின்றது. இந்தக் கருத்து உண்மையாக வேண்டுமெனில் உலகின் மக்கள் தொகையில் சுமார் 60 விழுக்காடு மக்கள் வசிக்கும் ஆசியா பொருளாதார அடிப்படையில் முன்னேற வேண்டும். அதற்கு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்னும் திட்டம் முக்கிய வழியாக அமைந்துள்ளது.

உலக அளவில் இன்று காணப்படும் பெரும் பிரச்சனைகளான வறுமை, வேலை வாய்ப்பின்மை, சசுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஆகியவை தீர்ப்பட வேண்டுமெனில் அதற்கு உலகமயமாகத்தின் அடைப்படையில் அமைந்த இந்த திட்டம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதார மேம்பாடு ஏற்பட்டு சுகாதாரப் பிரச்சைனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

ஒரு சில காரணங்களால் இந்தியா இத்திட்டத்தில் பங்கேற்பது பற்றி உறுதி செய்யவில்லை. ஆனால், இன்னும் சில நாட்களில் இந்தியத் தலைமையமைச்சர் மோடி இத்திட்டம் தொடர்பாக நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே என் போன்றோர்களின் கருத்து என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

பிராந்திய அளவில் சர்வதேச ஒற்றுமையைக் கொண்டு வர முயற்சி செய்யும் இத்திட்டத்தில் இந்தியா, சீனா ஆகிய இரு பெரும் நாடுகள் பங்கேற்பதன் வழி இரு நாடுகளில் உள்ள தொழிநுட்பம், மனித வளம் போன்றவை இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நிகழுமாயின் அது ஆசியக் கனவு நனவாவதற்குரிய அடிப்படையை வழங்கும். அதோடு இவ்விரு நாடுகளைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளும் பலன் பெற முடியும். எனவே, பல லட்சம் கோடி முதலீடுகள் எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்பதே என் போன்றோரின் கருத்து என்று அவர் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040