சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் சாங் காவ் லீ ஞாயிற்றுக்கிழமை உரை நிகழ்த்தினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் நடைமுறையாக்கத்தில் தொடர்புடைய நாடுகள் மற்றும் மக்களுக்கு மேலும் சிறப்பாக நன்மை புரிவது பற்றிய கொள்கை, அடிப்படை வசதிகள், வர்த்தகம், நிதி, நட்புறவு ஆகிய துறைகளில் அவர் 5 ஆலோசனைகளை வழங்கினார்.