கொள்கை மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத் துறையில் தொடர்பை வலுப்படுத்தி, கூட்டாளியுறவை ஆழமாக்குவது, தொடர்பு மற்றும் பரிமாற்றத் துறையில் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொண்டு கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது ஆகிய இரு தலைப்புகள் பற்றி அவர்கள் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டுள்ளனர். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில்,
அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தையும் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தையும் முன்னேற்றி கூட்டு செழுமையை நனவாக்குவது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் மைய அம்சங்களாகும் என்று கூறினார். இம்முன்மொழிவு சீனாவால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இது உலகிற்கு உரியது என்று ஷி ச்சின்பீங் குறிப்பிட்டார்.
அதன் கட்டுமானம் வேறுபட்ட பிரதேசங்கள், வளர்ச்சி கட்டங்கள் மற்றும் நாகரிகங்களைக் கடந்து செல்கின்றது. இது அனைவரையும் உள்ளடக்கிய திறந்த ஒத்துழைப்பு மேடையாகும் பல்வேறு தரப்புகளும் கூட்டாகக் கட்டியமைக்கும் உலகப் பிரச்சினைக்கான பொது தீர்வு இதுவாகும். இது ஆசிய-ஐரோப்பிய கண்டத்தை மையமாகக் கொண்டு, நண்பர்களுக்குத் திறந்து வைக்கப்படும். எந்த குறிப்பிட்ட ஒரு தரப்பையும் இது தவிர்க்க மாட்டாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு ஆரம்பிக்கப்பட்டது முதல் 3 ஆண்டுகளில், அதற்கு சர்வதேச சமூகத்தின் ஆக்கமுள்ள ஆதரவுகள் கிடைத்துள்ளன. பல்வகை ஒத்துழைப்புகளில் இருந்து பொது மக்கள் உண்மையான நன்மையைப் பெற்று வருகின்றனர். நடப்பு மன்றக் கூட்டம் மூலமாக, மேலதிக பொது கருத்துக்களை எட்டி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கு வழிகாட்டி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அடிப்படை வசதி, வர்த்தகம் மற்றும் முதலீடு, நிதி ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளைத் தவிரவும், பண்பாட்டுப் பரிமாற்றம், மற்றும் மக்களிடையேயான தொடர்புக்கான ஒத்துழைப்புகள் ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் பல்வேறு நாடுகளிலுள்ள மக்கள், பங்களிப்பாளர்களாவும், நலன்பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
.வட்ட மேசைக் கூட்டம் நிறைவுபெற்ற பிறகு, ஷிச்சின்பிங், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து, நடப்பு கூட்டங்களின் சாதனைகளை விவரித்தார்.