• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் நிறைவு
  2017-05-16 11:27:47  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறைவுற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செய்தியாளர்களைச் சந்தித்த போது, நடப்பு கூட்டத்தில் பல்வேறு தரப்புகளின் ஒத்த கருத்துக்கள் காணப்பட்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்புக்கு வழிகாட்டி, செயல் திட்டத்தைத் தெளிவுபடுத்தி, பல்வேறு தரப்புகளும் இணைந்து மனிதகுலத் தலைவிதிக்கான பொது சமூகத்தை உருவாக்கும் ஆக்கப்பூர்வ அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

"சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை இணைந்து கட்டியமைப்பது, கூட்டு வெற்றி மற்றும் வளர்ச்சியை நனவாக்குவது" என்ற தலைப்பில், கடந்த இரண்டு நாட்களில், 1500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள், விவாதம் நடத்தினர். 15ஆம் நாள் நடைபெற்ற வட்ட மேசைக் கூட்டத்தில், 30 நாட்டுத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி கூட்டுறவை ஆழமாக்குவது பற்றியும், தொடர்புக்கான ஒத்துழைப்பை முன்னேற்றி கூட்டு வளர்ச்சியை நனவாக்குவது பற்றியும் பரந்தளவில் உடன்பாட்டை எட்டி, கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

2013ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்ட பிறகு, பல்வேறு தரப்புகளும் "விரிவான கலந்தாய்வு, கூட்டுப் பங்களிப்பு, பயன்களின் பகிர்வு" என்ற கோட்பாட்டின்படி முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தற்போது இக்கட்டுமானம் பன்முகங்களிலும் மேற்கொள்ளப்படும் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது.

அடுத்ததாக, இம்முன்மொழிவில் பங்கேற்ற தரப்புகளும் மேலும் பெரிய மற்றும் பரந்த அளவில் இது தொடர்பான கட்டுமானத்தை முன்னேற்றி, பொருளாதார வளர்ச்சிக்கான புதிய இயக்காற்றலைத் தேடி, மனிதகுலத்திற்கான பொது சமூகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி முன்னேறும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தற்போது வரை, சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் மொத்த எண்ணிக்கை 68 ஆகும். முக்கியமான சர்வதேச முன்மொழிவான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு முக்கிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்று பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இக்கட்டுமானத்தை முன்னேற்றி, சர்வதேசப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிப்பது, பல்வேறு நாடுகளின் நீண்டகால வளர்ச்சிக்குப் பொருத்தமாக உள்ளது. இக்கட்டுமானத்தின் எதிர்காலம் மீது சர்வதேச சமூகம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040