சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேயை செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விக்ரமசிங்கே சீனாவில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சீனா இலங்கையுடன் நட்புறவை வளர்க்கும் கொள்கை நீண்ட காலமானது உத்தி நோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷி ச்சின்பீங் சுட்டிக்காட்டினார். இரு நாட்டுறவை முன்னேற்ற, இரு நாடுகளின் தலைவர்கள் கொள்கைத் துறையில் பரிமாற்றத்தை அதிகரித்து, பொது அக்கறை கொண்ட உலகளாவிய பிரச்சினைகள் பற்றி நிலைப்பாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் தொழில் மயமாக்க முன்னேற்றப் போக்கில் குறிப்பாக அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் சீனா மேலதிகமாக பங்கெடுப்பதை வரவேற்பதாக விக்ரமசிங்கே தெரிவித்தார். சொந்த நாட்டின் நிலவியல் மேம்பாட்டை வெளிப்படுத்தி ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் இலங்கை பங்களிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.