• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல்வழி பட்டுப்பாதையின் அடிப்படை வசதி கட்டுமானம் பற்றிய உயர் நிலை ஆய்வுக் கூட்டம்
  2017-05-17 14:27:06  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த்த்தின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில், கடல்வழி பட்டுப்பாதையின் அடிப்படை வசதி கட்டுமானம் தொடர்பான உயர் நிலை ஆய்வுக் கூட்டம் 16ஆம் நாள் சியாமென் நகரில் நடைபெற்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில், அடிப்படை வசதிகள் தான் முதன்மை பங்காற்றி வருகின்றன. சீனாவின் மேம்பாடுடைய தொழிற்துறைகள் வெளிநாடுகளில் செயல்பட்டால், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் அடிப்படை வசதிகளின் இணைப்புக்குத் துணைபுரியும் என்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"சர்வதேச உற்பத்தி திறன் ஒத்துழைப்பு ஒன்றியத்துக்கான அமைப்புக் குழுப் பொறுப்பாளர் பேசுகையில், தற்போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள 53 நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்பு மூலம் மேற்கொள்ளும் அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகளின் எண்ணிக்கை 1500க்கும் மேலாகும். அவற்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படுகிறது. எனவே, இந்த நாடுகள் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்கி, மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு அடிப்படை வசதிகளின் கட்டுமானம் ஆக்கப்பூர்வப் பங்காற்றும் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளின் முயற்சி மற்றும் வளர்ச்சியுடன், சீன தொழில் நிறுவனங்களின் செயல்திறனும் நிலையும் உலக வரையறையை எட்டியுள்ளன. குறிப்பாக உயர்வேக இருப்புப்பாதை, துறைமுகம் ஆகிய துறைகளில் சீனாவின் கட்டுமான தரம் உலகின் முன்னேறிய நிலையில் உள்ளது. மேம்பாடுடைய சீனத் தொழில்துறைகள் வெளிநாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு வலிமைமிக்க ஆதரவை வழங்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

தா தாங் குழும நிறுவனம் சீனாவில் மிகப் பெரிய மின் உற்பத்தி தொழில் நிறுவனமாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவுக்கு ஆக்கப்பூர்வ மறுமொழி அளித்து, வெளிநாடுகளில் செயல்படும் வேகத்தை விரைவுபடுத்தி வருகிறது. மியன்மார், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அதன் அலுவலகங்கள் மற்றும் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 20க்கும் அதிகமாகும். பெருவாரியான வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

3000 கிலோமீட்டர் நீளமுடைய சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி, வடக்கில் பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்துடனும் தெற்கில் 21ஆவது கடல்வழி பட்டுப்பாதையுடனும் இணைந்துள்ளது. போக்குவரத்து, எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் அடிப்படை வசதிகளின் கட்டுமானத் திட்டப்பணிகள் பலவற்றுடன் தொடர்புடைய இந்த இடைவழி கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, சுமார் 300 கோடி மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040