• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பட்டுப்பாதை அருங்காட்சியக ஒன்றியம்
  2017-05-18 16:49:36  cri எழுத்தின் அளவு:  A A A   

மே 18ஆம் நாள் உலக அருங்காட்சிய நாளாகும். வியாழக்கிழமை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 97 அருங்காட்சியகங்கள் பொது மக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டன. மேலும் அன்று, பட்டுப்பாதை அருங்காட்சியக ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

2016ஆம் ஆண்டு, சீனாவில் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை 4800க்கு அதிகமாகும். அவற்றில் சுமார் 87 விழுக்காடு மக்களுக்கு இலவசமாக உள்ளன. 26.6 விழுக்காடு அருங்காட்சியகங்கள் அரசு சாராததாகும் என்று சீனத் தேசிய தொல்பொருள் பணியகத்தின் தலைவர் லியூ யூ ட்சூ குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கண்காட்சிகள் பல்வேறு அருங்காட்சியகங்களில் நடத்தப்படும். இவற்றிலும் தொடர்புடைய வகுப்புகளிலும் சுமார் 90 கோடி மக்கள் பங்கெடுத்துள்ளனர் என்று அவர் கூறினார். பன்னாட்டு அருங்காட்சியகச் சங்கத்தின் தலைமைய இயக்குநர் பீட்டர் கைலர் பெய்ஜிங்கில் நடைபெற்ற தொடர்புடைய நடவடிக்கையில் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அருங்காட்சியகமும் சர்ச்சைக்குரிய வரலாறும் என்பது இவ்வாண்டு அருங்காட்சியக நாளின் தலைப்பாகும் என்று கூறினார். அருங்காட்சியகங்கள் மூலம் வரலாற்றை மேலும் செயலாக்க முறையில் மீளாய்வு செய்து, மேலும் திறந்த மனப்பாங்குடன் மனித குலத்தின் வரலாற்றுப் பண்பாட்டு மரவுச் செல்வங்களை மதிப்பிட வேண்டும். அதன் படிப்படையில், இன்று பற்றி யோசித்து, எதிர்காலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் இணைக்கும் மேடையாகவும், சீனாவையும் உலகையும் இணைக்கும் பாலமாகவும் அருங்காட்சியகம் திகழ்கின்றது. பட்டுப்பாதை நெருகிலுள்ள நாடுகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான அருங்காட்சியகங்கள் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் பட்டுப்பாதை அருங்காட்சியக ஒன்றியத்தை உருவாக்கின. சி ஆன் தாங் வேஸ்ட் மார்கிட் அருங்காட்சியகத்தின் தலைவர் வாங் பின், இவ்வொன்றியத்தின் தலைவராகப் பதவி ஏற்றார். அவர் கூறியதாவது,

கண்காட்சி பரிமாற்றம், தரவுகள் பரிமாற்றம், மனித வள பரிமாற்றம் முதலிய துறைகளில் நாங்கள் முக்கியமாக ஈடுபடுவோம். மேலும், மரபு செல்வங்களின் பாதுகாப்பு துறையில் இவ்வொன்றியத்தின் உறுப்புகள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும். பட்டுப்பாதை நாடுகளின் பண்பாட்டு பரிமாற்றம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான நாடுகளின் மானிடவியல் பரிமாற்றம் ஆகியவற்றை முன்னேற்றுவது நமது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040