தென் சீனக் கடலைச் சேர்ந்த ஷென் ஹு பிரதேசத்தில், எரியக்கூடிய பனிக்கட்டி எனப்படும் இயற்கை எரிவாயு ஹைட்ரேட்(Natural Gas Hydrate) சோதனை முறையில் அகழ்ந்தெடுத்ததன் மூலம், 187மணிநேரத்தில் இயற்கை எரிவாயு இடைவிடாமல் நிதானமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடல் பரப்பில் இயற்கை எரிவாயு ஹைட்ரேட் சோதனை முறையில் அகழ்ந்தெடுப்பதில் சீனா வெற்றி பெற்றது இது முதன்முறையாகும். இது, எரியாற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு சீர்திருத்தத்துக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.(தேன்மொழி)