• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 2 புதிய பீரங்கிகள்
  2017-05-19 11:02:00  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவிடமிருந்து புதிதாக 2 பீரங்கிகளை இந்தியா பெற்றுள்ளதாக என்டிடிவி செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே, 145 பீரங்கிகளுக்கான, 70 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தப்படி, முதற்கட்டமாக இரண்டு எம்-777 ரக பீரங்கிகள் வந்துள்ளன. இவை, பிஏஇ சிஸ்டமஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. மேலும், 25 பீரங்கிகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன. மற்றவை, இந்தியாவிலேயே பிஏஇ சிஸ்டம்ஸ் மற்றும் மஹிந்திரா பாதுகாப்பு சிஸ்டம்ஸ் ஆகியவை இணைந்து உற்பத்தி செய்ய உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரக பீரங்கிகளின் அதிகபட்ச தாக்கும் தூரம் 30 கிலோ மீட்டர். இவை, உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுக்குப் பிறகு, 30 ஆணடுகளுக்குப் பின் பீரங்கிகள் தற்போதுதான் வெளிநாட்டிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040