தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் 14வது உயர் நிலை அதிகாரிகள் கூட்டம் 18-ஆம் நாள் சீனாவின் குய் யாங் நகரில் நடைபெற்றது.
தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பாக சீனாவும் ஆசியான் நாடுகளும் உருவாக்கியுள்ள முதலாவது அரசியல் ஆவணம், இவ்வறிக்கை ஆகும். சீனாவும் ஆசியான் நாடுகளும் பரஸ்பர நம்பிக்கைக்குரிய சுமுகமான அண்டை நாட்டுறவை வலுப்படுத்த பாடுபடுவது, கலந்தாய்வு மூலம் தென் சீனக் கடலில் நடத்தை விதியை உருவாக்குவதன் திசையில் பல்வேறு தரப்புகள் கூட்டாக பாடுபடுவது ஆகியவை, இந்த அறிக்கையில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன., இவ்வறிக்கையின் நடைமுறையாக்கம் பற்றி, இரு தரப்பும் உருவாக்கும் அமைப்புமுறை மயமாக்கத்துக்குரிய மேடையாக நடப்பு கூட்டம் கருதப்படுகின்றது.
சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லீயூசென்மின் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான மூன்று ஆணையங்களை நிறுவுவது பற்றிய ஆவணம் நடப்புக் கூட்டத்தில் பரிசோதனை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2016-2018ஆம் ஆண்டுக்கால பணித் திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் சீனக் கடலில் நடத்தை விதி பற்றிய கட்டுக்கோப்பு வரைவையும் பல்வேறு தரப்புகள் நிறைவேற்றியுள்ளன.
தவிர, தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை விதி பற்றிய அறிக்கையை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பல்வேறு தரப்புகள் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறி கொண்டு, ஆக்கப்பூர்வ முன்னேற்ரங்கள் பெறப்பட்டுள்ளன. இது பற்றி, ஆசியான் நாடுகள் மற்றும் சீனாவுடன் உறவை ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பேற்கும் சிங்காப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் சி வெய்சியங் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 18முதல் 24ஆம் நாள் வரை, சீனாவும் ஆசியான் நாடுகளும் கடலில் ஏற்படும் அவசர நிலையைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட உயர் நிலை தூதாண்மை அதிகாரிகளுக்கிடையேயான உடனடித் தொலைப்பேசியின் பயன்பாடு, சோதனை செய்யப்பட்டது. இது ஆக்கப்பூர்வ பயன்களைப் பெற்றுள்ளது என்றார். 24மணிநேரத்தில் கடலில் நிகழக்கூடிய சம்பவங்களைக் கையாள உருவாக்கப்படும் உடனடித் தொலைப்பேசி அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு வெகுவிரைவில் வரக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையில், சீனாவும் ஆசியான் நாடுகளும் சுய நிர்ணயத்துடன் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்த்து, கூட்டு நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லீயூச்சென்மின் வேண்டுகோள் விடுத்தார்.