ஷெஃபௌ, சீனாவில் வசந்த காலத்தின் போது, கொண்டாடப்படும் ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். தாவு நடைக்கோல், கப்பல் நடனம், யாங்க நடனம் முதலியவை இதில் அடக்கம். இதன் தொடர்புடைய வடிவங்கள், பல்வேறு பிரதேசங்களில் வேறுபாடுகளாக உள்ளன. மத்திய சீனாவின் ஹெய்நான் மாநிலத்திலுள்ள ஹௌச்சுவான் எனும் சிறிய கிராமம், இந்நடனத்துடன் தொடர்புடைய கருவிகளைத் தயார் செய்யும் வரலாறு சுமார் நூற்றாண்டாகும். சிறிய பணிமனையில் தயாரிப்பு பிந்தங்கிய விற்பனை முறை ஆகியவற்றால் இப்பாரம்பரிய சிறுபான்மை தேசிய கைவினைத் தொழில் சிக்கலான நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இணையம் விரைவாக வளர்ந்து பரவி வருவதோடு, இக்கிராமும், இணையத்தால் வெளியுலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராமவாசிகள், இணையம் மூலம், இந்நடன கருவிகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம், இக்கிராமம் வெகுவாக வறுமையிலிருந்து விடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டில் கோடைகாலத்தின் போது, செய்தியாளர்கள் இக்கிராமத்தில் நுழைந்தனர். இக்கிராமத்தில் அதிகமான தூதஞ்சல் சேவை வானகங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் நடனக் கருவி மற்றும் ஆடை உற்பத்தி மார்க்கம் காணப்படலாம்.
இங்குள்ள உற்பத்தி குறிப்பிட்ட அளவை எட்டியுள்ளது என்று இக்கிரமத்தின் பொறுப்பாளர் ஹௌசுன் ஷெங் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
எங்களுடைய கிராமத்தில் ஆயிரக்கணக்கான வகை கருவிகள் இடம்பெறுகின்றன. நூறு ஆண்டுக்கும் மேலான வரலாற்றுடைய கைவினைத் தொழில் இங்கு உள்ளது. தென்கிழக்காசியா, ஐரோப்பியா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டுச் சந்தையில் இங்குள்ள உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்நடனக் கருவியைப் பற்றி பேசுகையில், எங்களுடைய கிராமம், அனைவரும் அறிந்துகொள்ளும் ஒரு கிராமமாகும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, இக்கிராமத்தில் சுமார் 80 விழுக்காட்டுக் கிராமவாசிகள் ஷேஹொ கருவித் தயாரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கிராமவாசி யௌ ஹொங் யூ இவ்வாண்டு 50வயது ஆகிறது. இத்தயாரிப்புப் பணியில் அவர் சுமார் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். அவரது குடும்பத்தில் நுழைந்தவுடன், பல்வகை நடனக் கருவிகளைப் பார்க்கலாம். தற்போதை விற்பனை மிகவும் சீராக உள்ளது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் எப்படி நல்ல விலையில் விற்பனை செய்வது என்பது மிகவும் சிக்கலானது. உயர் நிலை கல்வி பயின்று வருகின்ற அவரது மகன் யௌ யொன் கான் வீட்டில் இத்தயாரிப்புப் பணிக்கு உதவி செய்கின்றார். அவர் கூறியதாவது
முன்பு, இத்தகைய தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் கடினம். இளைஞர்கள் இதில் ஈடுபட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். இப்போது, இணையத்தின் மாபெரும் வளர்ச்சியோடு, இணையம் மூலம் ஷெஹௌ கருவிகளை விற்பனை செய்வது மிகவும் வெற்றிகரமாக உள்ளது. கடந்த ஆண்டில், இக்கிராமத்தின் இந்நடனக் கருவி உற்பத்தி தொகை பத்து கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.