சியாமென் நகர், சீனாவில் மிக முன்னதாக நிறுவப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. சீனச் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி போக்கில் இந்நகரில் பல முக்கிய சாதனைகள் உருவாக்கப்பட்டிருந்தன. சீனாவின் சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றது. பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 9வது சந்திப்புக்கான தயாரிப்புப் பணி பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சியாமென் நகர் கமிட்டியின் செயலாளர் பெய் சின் ஜியா கூறுகையில், தயாரிப்புப் பணி தொடங்கிய பின், ஃபூ ஜியான் மாநிலமும் சியா மென் நகரும், நடுவண் அரசின் ஏற்பாட்டுடன், பல்வேறு நடவடிக்கைகளை சீராக மேற்கொண்டு வருகின்றன. சந்திப்புக்கான ஏற்பாடு, கூட்டம் நடைபெறும் அரங்குகள், சுற்றுச்சூழல் உத்தரவாதம், பாதுகாப்பு முதலிய பணிகள் திட்டப்படி ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன என்றார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
100க்கு அதிகமான நாட்களுக்கு பின், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 9வது சந்திப்பு அதிக்காரப்பூர்வமாக துவங்க உள்ளது. முழுமையான அடிப்படை வசதிகள் கொண்ட சியாமென் நகர், சுற்றுலா கண்காட்சி நடைபெறிருந்த நகரமாகும். இதனால், இந்நகரில் விடுதி, கூட்டம் நடைபெறும் அரங்கு ஆகியவை உயர் தரமுடையது. நடப்பு சந்திப்பு சியாமென் நகரில் தங்கு தடையின்றி நடைபெறும் என்று நம்புகின்றோம் என்றார்.
தவிர, நடப்பு சந்திப்புக்கு தயாராகும் போக்கில், உள்ளூர் பொது மக்களின் நகரவாசிகளுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறித்து, செய்தியாளர் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டன. இது பற்றி பெய் சின் ஜியா கூறுகையில், சிக்கனம், பயன் தரும் முறையில் நடவடிக்கை மேற்கொள்வது, பொது மக்களுக்கான தலையீட்டைக் குறைப்பது, பொது மக்கள் நலன்களைப் பெறும் உணர்வை அதிகரிப்பது ஆகியவை, நாங்கள் ஊன்றி நிற்கும் கோட்பாடுகளாகும் என்றார். சர்வதேச பழக்கம் மற்றும் உண்மையான தேவைகளுக்கு இணங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் நிலைமையில், ஏற்கனவேயுள்ள அடிப்படை வசதிகள் நியாயமாக சீராக்கப்படும் என்றார். மேலும், சந்திப்பின்போது, மிகவும் முக்கிய நேரத்தில், தனிச் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்வதை தவிர, பெரும் பகுதியிலான போக்குவரத்து சீராக இயங்குவதை உத்தரவாதம் செய்வோம். உற்பத்தி மற்றும் நகரவாசிகளின் வாழ்வுக்கான பாதிப்பு இயன்ற அளவில் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.