கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனத் தயாரிப்பு 2025 எனும் திட்டம் தொடர்பான பல்வகை பணிகளில், ஆக்கப்பூர்வ முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தொழிற்துறை வளர்ச்சியை நிதானப்படுத்தி, தயாரிப்புத் தொழில் வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கு இது முக்கிய பங்காற்றியுள்ளது. இது குறித்து, சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் சின் குவாங் பின் கூறியதாவது:
"புத்திசாலித்தனத் தயாரிப்பு நிலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. வரையறை முறைமை கட்டமைப்பு பூர்வாங்க ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது. புத்திசாலித்தன மயமாக்கத் தொழிற்சாலைகளும், டிஜிட்டல் மயமாக்கப் பணிப்பட்டறைகளும் நிறுவப்பட்டுள்ளன. முக்கிய தொழில்களின் டிஜிட்டல் மயமாக்க ஆய்வு மற்றும் வளர்ச்சி வடிவமைப்பு கருவிகளின் பரவல் விகிதமும், டிஜிட்டல் மயமாக்க உற்பத்தி சாதனங்களின் இணையத் தொடர்பு விகிதமும் குறிப்பிட்ட அளவில் உயர்ந்து வருகின்றன. தனிநபரின் தேவைக்குப் பொருந்திய வடிவமைப்பு, ஒருங்கிணைந்த ஆய்வு மற்றும் தயாரிப்பு ஆகியவை விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றன" என்றார் அவர்.
புள்ளி விபரங்களின்படி, இத்திட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு பின், சீனா முழுவதிலும் புத்திசாலித்தனத் தயாரிப்பு பற்றிய 109 சோதனை மற்றும் மாதிரி திட்டப்பணிகளின் உற்பத்தி பயன், சராசரியாக 38 விழுக்காடு அதிகரித்துள்ளது. எரியாற்றல் பயன் 9.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே வேளையில், இவற்றுக்கான செலவு, 21 விழுக்காடு குறைந்துள்ளது.
சீனத் தயாரிப்பு 2025 எனும் திட்டத்தில், வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்கள் பங்கெடுக்கலாம் என்றும், வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனத் தயாரிப்பு வல்லரசு ஆக்கப்பணியில் ஆழமாக பங்கெடுப்பதை வரவேற்பதாகவும் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெளிநாட்டு முதலீட்டு கூட்டு நிறுவனங்கள், உயர் நிலை தயாரிப்பு, பசுமை தயாரிப்பு, புத்திசாலித்தனத் தயாரிப்பு, வடிவமைப்பு, பொறியியல் ஆலோசனை, நவீன சரக்குப் புழக்கம், சோதனை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட திட்டப்பணிகளில் பங்கெடுத்துள்ளன என்று தெரிய வருகிறது. (மீனா)