168 மணி நேர இயக்கத்திற்குப் பிறகு, சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணியின் சஹிவால் நிலக்கரி மின் நிலையத்தின் முதல் தொகுதி 25ஆம் நாள் அதிகாரபூர்வமாக வேலை செய்யத் துவங்கியுள்ளது. தற்போது பாகிஸ்தானில் உள்ள மிகத் தரமான நிலக்கரி மின் நிலையம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சஹிவால் நிலக்கரி மின் நிலையத்தின் முதல் தொகுதி, 22 திங்கள் காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் இது முதன் முறையாகும். பாகிஸ்தான் எரியாற்றல் பற்றாகுறையைச் சமாளிப்பதற்கு இது உதவியளிக்கும். சீன-பாகிஸ்தான் இரு நாடுகளின் அதிகாரிகளும் பொருளியலாளர்களும், இத்திட்டப்பணிக்கு அளித்த முயற்சி, இரு நாடுகளின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் வெளிக்காட்டியுள்ளது என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரிப் தெரிவித்தார்.
(கலைமணி)