• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க விமானத்தை இடைமறித்தல் தொடர்பாக சீனாவின் பதில்
  2017-05-28 15:26:44  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் இரண்டு ஜே-10 போர் விமானங்கள் அமெரிக்காவின் பி-3 கண்காணிப்பு விமானத்தை இடைமறித்ததாக அமெரிக்க ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டது. இது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ ஜியன் 28ஆம் நாள் பேசுகையில், அமெரிக்காவின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று கூறினார்.

மே 25ஆம் நாள் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் ஒன்று சீன ஹாங்காங்கின் தென்கிழக்கு வான்பரப்பில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட. சீனாவின் போர் விமானங்கள் சட்டப்படி அதன் அடையாளத்தை உறுதி செய்தன. இது தொடர்பான நடைமுறைகள் தொழில் சார் பாதுகாப்பு முறையில் உள்ளன என்று வூ ஜியன் குறிப்பிட்டார்.

மேலும், அண்மைக்காலத்தில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த கப்பல்களும் விமானங்களும் சீனாவின் கடல் மற்றும் வான் பரப்பில் செயல்பட்டு வருகின்றன. இது சீனாவின் அரசுரிமையை ஊறுபடுத்தியதோடு, முன்னணியில் ஈடுபடும் இருதரப்பினரின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயல் சீன-அமெரிக்க கடல் மற்றும் வான் பாதுகாப்பு பிரச்சினையை உண்டாக்கும் ஊற்றுமூலமாகும். அமெரிக்க தரப்பு பயனுள்ள நடவடிக்கையை மேற்கொண்டு இச்செயலைத் திருத்துமாறு சீனா மீண்டும் கோருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040