• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஜெர்மனி ஒத்துழைப்பை விரிவாக்கும் சீனத் தலைமை அமைச்சரின் பயணம்
  2017-05-30 16:30:05  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங், மே 31, ஜுன் 1 ஆகிய நாட்களில் ஜெர்மனியில் பயணம் மேற்கொண்டு, ஜெர்மனி தலைமை அமைச்சர் மெர்கல் அம்மையாருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜெர்மனிக்கான சீனத் தூதர் ஷி மிங்தே, இப்பயணத்தின் நோக்கம், இருநாட்டு எதிர்கால ஒத்துழைப்பு உள்ளிட்ட கேள்விகள் குறித்து செய்தியாளருக்குப் பேட்டியளித்தார்.

இவ்வாண்டு சீன-ஜெர்மனி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். இந்தக் காலத்தில் இருநாட்டுறவின் வளர்ச்சி, ஏற்றத்தாழ்வைச் சந்தித்த போதிலும், பொதுவாக நிதானமாகவும் பயனுள்ளதாகவும் இருந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இருநாட்டுறவின் வளர்ச்சியை மீளாய்வு செய்து, இவ்வளர்ச்சிக்காக புதிய ஒத்துழைப்புத் துறைகளை உறுதிப்படுத்தி, புதிய திசையை வழிகாட்டுவது, தலைமை அமைச்சர் லி கெச்சியாங் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று ஷி மிங்தே கூறினார்.

மேலும், ஐரோப்பா சிக்கிலான நிலைமையை எதிர்கொள்வது, உலகளவில் உறுதியற்ற காரணிகள் அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் பின்னணியில், தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் மூன்றாவது முறை ஜெர்மனியில் பயணம் மேற்கொள்வது, சீன-ஐரோப்பிய மற்றும் சீன-ஜெர்மனி உறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது மட்டுமல்ல இருதரப்புகளுக்கான வாய்ப்புகளையும் இப்பயணம் வழங்கும். உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்வதற்கான உடன்படிக்கையின் 15ஆவது விதி குறித்து இருநாட்டுத் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர். இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் சீனா மீது குவிப்பு விற்பனைக்கு எதிரான விசாரணை செய்யும் போது, மாற்று நாடு என்ற செயல் முறையை நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சீன-ஜெர்மனி ஒத்துழைப்பின் எதிர்கால ஆற்றல் பற்றி குறிப்பிடுகையில், அதிக ஆர்வமுடன் செயல்பட்டால் இருநாட்டு ஒத்துழைப்புக்கு பெரிய அரங்கு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை எடுத்துக்காட்டாக கூறினால், இதன் மீதான ஜெர்மனியின் மனநிலை தெளிவாக மாறியுள்ளது. குறிப்பாக ஜெர்மனியின் பொருளாதாரத் துறை இதில் பங்கெடுக்கும் உற்சாகம் அதிகரித்து வருகிறது. மேலை நாட்டு அரசியல்வாதிகளில் மெர்கல் அம்மையார் முதலில் வெளிப்படையாக இம்முன்மொழிவுக்கு ஆதரவளித்தார். ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியில் மிக அதிக முதலீடு செய்த நாடு ஜெர்மனிதான் என்று ஷி மிங்தே கூறினார்.

சீன-ஜெர்மனி கூட்டு வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள உலகில் போதுமான சந்தை உள்ளது. இருநாட்டு ஒத்துழைப்புக்கான அமைப்பு முறையை மட்டுமல்ல சிந்தனையையும் புதுப்பித்து, இருநாட்டு ஒத்துழைப்பின் நிலை உயர்வை நனவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040