சீனாவின் ஜியாங் சி மாநிலத்தின் வன் அன் மாவட்டத்தின் துங் கிராமம், 1000க்கும் குறைவான மக்கள் கொண்ட கிராமமாகும். கோ ஹுங் காங் என்பவர், இவர்களில் ஒருவராவார். முன்பு, அவர், நெல் மட்டுமே பயிரிட்டு வருந்தார். 2014ஆம் ஆண்டு, சீனாவின் குவாங் துங் மாநிலத்தின் வர்த்தகர்கள், துங் கிராமவாசிகளுக்கு ஹே ஷவ் வூ செடிகளை இலவசமாக கொடுத்து, அவற்றைப் பயிரிடும் முறையைக் கற்று கொடுத்தனர்.
ஹே ஷவ் வூ என்ற செடி, முடிக்கும் எலும்புக்கும் துணை புரியும் சீன பாரம்பரிய மருந்தாகும். நெல் பயிரிடுவதை ஒப்பிடும் போது, ஹே ஷவ் வூவை பயிரிடுவது, எளிதாக இருக்கும். அதோடு மேலதிகமான இலாபத்தையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், 2014ஆம் ஆண்டு முதல், கோ ஹுங் காங் உள்ளிட்ட துங் கிராமத்தின் மக்களில் பலர், ஹே ஷவ் வூவை பயிரிடத் துவங்கினர். இது குறித்து கோ ஹுங் காங் கூறியதாவது—
கிட்டத்தட்ட 6 ஹெக்டர் நிலத்தில், நான் ஹே ஷவ் வூவைப் பயிரிடுகின்றேன். முன்பு, நெல் விளைச்சல் மூலம் ஹெக்டருக்கு 6000 யுவான் வரை சம்பாதிக்க முடிந்தது. தற்போது ஹே ஷவ் வூ பயிரிடுவதன் மூலம் ஹெக்டருக்கு 64 ஆயிரம் யுவான் வரை சம்பாதிக்கிறேன் என்றார்.
2015ஆம் ஆண்டு து கிராமம், காங் தேய் என்ற சீன பாரம்பரிய மருந்து கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது. 45 குடும்பங்கள், இச்சங்கத்தில் சேர்ந்தன. வறுமை ஒழிப்பு பணிக்கு தலைமை தாங்கும் துங் கிராமத்தின் தலைவர் கோ யி ஹுவாங், துங் கிராமம் எட்டிய சாதனைகளை நேரில் கண்டுள்ளார். அவர் கூறியதாவது—
நெல் பயிரிடுவதற்குப் பதிலாக, ஹே ஷவ் வூ என்ற சீனாவின் பாரம்பரிய மருந்துச் செடியைப் பயிரிடுவது என்பது நமது திட்டமாகும். 2014ஆம் ஆண்டு குவாங் துங் மாநிலத்தின் வர்த்தகர்களுக்கு கிராமவாசிகள் பணி புரிந்தனர். அப்போது அவர்களிடமிருந்து நிறைய பயிரிடும் திறனை கற்று கொண்டனர். 2015ஆம் ஆண்டு, நாங்கள் சொந்தமாக முயற்சி செய்து, 6.6 ஹெக்டர் நிலத்தில் ஹே ஷவ் வூவைப் பயிரிட்டோம் என்றார் அவர்.
துங் கிரமாத்தின் ஹே ஷவ் வூ பயிரிடுதல் கூட்டுறவு சங்கம், வறுமையான கிராமவாசிகளைத் தேர்ந்தெடுத்தது. நாளுக்கு 100 யுவான் சம்பளம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)