கடந்த சில ஆண்டுகளில், புதுப்பிப்பு, தொழில் புரிவது, புதிய ரக நகரமயமாக்க ஆக்கப்பணி, சரக்குப் போக்குவரத்து ஆகிய துறைகளில், சீனா-ஜெர்மன் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு இடைவிடாமல் ஆழமாக்கி வருகின்றது. புதுப்பிப்பு துறையில், இரு நாடுகள், ஒன்றன் தேவையை மற்றது நிறைவு செய்யலாம். வசதி அமைப்பு முறை ஆக்கப்பணி, திறமைசாலிகளை வளர்ப்பது ஆகிய துறைகளில், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் ஃபோ சன் நகரிலுள்ள தேசிய நிலை அந்நிய ஒத்துழைப்பு மேடையான சீனா-ஜெர்மன் தொழிற்துறை சேவை பகுதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பொருட்காட்சி துறையை மையமாக கொண்ட உயர் நிலை சேவைத் துறை, உயர் நிலை சாதனம் உள்ளிட்ட உயர் நிலை உற்பத்தி தொழிற்துறை ஆகிய துறைகளில், இப்பகுதி முக்கியமாக பங்காற்றுகின்றது.
கடந்த ஆண்டில், இப்பகுதி, ஜெர்மனியின் ஹனோவெரியன் இயந்திர மனிதர் கழகத்துடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, ஃபோ சன் இயந்திர மனிதர் கழகத்தை உருவாக்கியது. சீனாவிலும் ஆசியாவிலும் முன்னிலையில் இருக்கும், நுண்மதி நுட்ப இயந்திர மனிதர் கண்காட்சி, வர்த்தகம், பயிற்சி, முதலியவற்றை கொள்ளும் மையமாக, இக்கழக்கத்தை உருவாக்க சீனா-ஜெர்மன் தொழிற்துறை சேவைப் பகுதி திட்டமிட்டுள்ளது. நுண்மதி நுட்ப இயந்திர மனிதர் தொழிற்துறை, புதுப்பிப்பு துறையில் சீனா-ஜெர்மன் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
ஹனோவெரியன் இயந்திர மனிதர் கழகம், கிட்டத்தட்ட 10 ஜெர்மனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, ஃபோ சன் நகருக்கு வந்து, ஃபோ சன் இயந்திர மனிதர் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும். நுண்மதி உற்பத்தி துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை இத்திட்டப்பணி முன்னேற்றும் என்று சீனா-ஜெர்மன் தொழிற்துறை சேவை பகுதி நிர்வாக குழுத் தலைவர் லியு யீ தெரிவித்தார்.
தொழிற்துறையில், ஜெர்மன் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, அந்நாட்டின் தொழிற்சாலை புதுப்பிப்புத் திறன், உலகின் உச்ச நிலையில் இருக்கின்றது. ஜெர்மனியின் தொழில் நுட்பங்களையும் அனுபவங்களையும் இறக்குமதி செய்து, இயந்திர மனிதர் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வது, சீன இயந்திர மனிதர் துறையின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று சீன சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் துணை பொருளியலாளர் ஷு ஹுங் சே கருத்து தெரிவித்தார்.
(கலைமணி)