அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு சீனாவின் ஆய்வு திட்டப்பணி முதல்முறையாக அனுப்பப்பட்டுள்ளது

ஸ்பெய்ஸ்-X என்னும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு தொழில் நிறுவனம் ஜூன் 3ஆம் நாள் பால்கான்-9 என்னும் ஏவூர்தியின் மூலம், டிராகன் என்னும் சரக்கு விண்கலத்தைச் செலுத்தியது. விண்வெளி வீரர்களுக்கான வினியோகப் பொருட்கள் மற்றும் ஆராய்ச்சிச் சாதனைகளை அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவது இது 11வது முறையாகும்.

சீனாவின் பெய்ஜிங் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெங் யூலின் தலைமைத் தாங்கிய ஆய்வுக்குழு சொந்தமாக வடிவமைத்த ஒரு ஆய்வு திட்டப்பணி, டிராகன் என்னும் சரக்கு விண்கலத்தின் மூலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (பூங்கோதை)