2017ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன-கசகஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
கசகஸ்தான் அரசுத் தலைவரின் அழைப்பின் பெயரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 7 முதல் 10ஆம் நாள் வரை கசகஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும், அஸ்தானா உலகப் பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் ஷிச்சின்பிங் பங்கேற்க உள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தை சீனா நடத்திய பிறகு ஷிச்சின்பிங்கின் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது விளங்குகிறது என்று சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் லீ ஹுய்லைய் 5ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இப்பயணமானது, சீனாவுக்கும் கசகஸ்தான் உள்ளிட்ட ஐரோப்பிய-ஆசிய நாடுகளுக்கும் இடையேயான உறவை ஊக்குவித்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியை முன்னெடுப்பதாக அமையும் என்று சீனா நம்புவதாக, லீ ஹுய்லைய் கூறினார்.(மதியழகன்)