நடப்புக்கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முதல்முறையாக உறுப்பு நாடுகளை அதிகரிக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் இதில் அதிகாரப்பூர்வமாக சேர்வதாக அறிவிக்கப்பட்டது. இவ்விரு நாடுகளும் சேர்வது, இவ்வமைப்பின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் என்று சுன் சுவாங்ச்சி குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்ந்த பிறகு, இவ்வமைப்பின் ஒத்துழைப்பு வாய்ப்புகளும் அளவும் மேலும் விரிவாகும். குறிப்பாக, பாதுகாப்புத்துறையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இப்பிரதேசத்தின் பெரிய நாடாக நிதான பாதுகாப்பிலும் பயங்கரவாத ஒடுக்குதலிலும் முக்கிய பங்கு ஆற்றலாம். தவிர, பொருளாதார மற்றும் வர்த்தகத்துறையில் போக்குவரத்து, நாணயம், எரியாற்றல் உள்ளிட்ட முன்னுரிமையுடைய துறைகளில் மேலதிக ஒத்துழைப்பு வாய்ப்புகள் உருவாகும் என்று சுன் சுவாங்ச்சி கூறினார்.
அதேவேளை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டத்தின் கட்டுமானத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமான முன்னேற்ற பங்கினை ஆற்றலாம் என்றும் அவர் தெரிவித்தார். சுன் சுவாங்ச்சி மேலும் கூறியாதவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணியும் ஒத்துழைப்பு இலக்கு மற்றும் கருத்தில் ஒத்த கருத்துக்களை உருவாக்குகின்றன. மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளும் பார்வையாளர் நாடுகளும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய நாடுகளாகும். எதிர்காலத்தில் இவ்விரு அமைப்புகளும் ஒன்றுக்கு ஒன்று நன்மை தந்து கூட்டாக வளர்ச்சியடையலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.(கலைமகள்)