• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அமெரிக்கா, சீனா, இந்தியா முன்னணி வகிக்கும் – அறிக்கை
  2017-06-08 16:06:08  cri எழுத்தின் அளவு:  A A A   
எப்டிஐ எனப்படும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் முக்கிய எதிர்கால களங்களாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா விளங்கும் என்று வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா மாநாடு புதன்கிழமை வெளியிட்ட முதலீட்டுக்கான ஆண்டு அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச நிறுவனங்களில் முக்கியமான கொள்கை இடர்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 2016இல் சர்வதேச அளவிலான எப்டிஐயின் நிலையில் 2 விழுக்காடு குறைந்தது.

குறிப்பாக, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்குச் செல்லும் எப்டிஐ 14 விழுக்காடு குறைந்தது. அதேபோல், வளரச்சி அடைந்த நாடுகளிலிருந்து வெளியேறும் முதலீட்டுத் தொகையும் 11 விழுக்காடு குறைந்தது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இவ்வாண்டுக்கான எப்டிஐ 5 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040