ஜுன் 7 முதல் 10ஆம் நாள் வரை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானில் அரசுமுறைப்பயணத்தை மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் செயற்குழுவின் 17ஆவது கூட்டத்திலும், அஸ்தானா சிறப்பு உலகப்பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் கலந்துகொள்வார். சீனாவும் கசகஸ்தானும் பன்முக உத்திநோக்குக் கூட்டாளியாக உள்ளன. இவ்விரு நாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படை உறுதியானது. ஷிச்சின்பிங்கின் இப்பயணத்தை வாய்ப்பாக கொண்டு இரு தரப்பின் பொருளாதார வர்த்தக உறவை புதிய கட்டத்தில் நுழைந்திட வைக்கும் என்று சீன வணிக துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சுன் ஜீவென் குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டு சீனாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடனான மொத்த வர்த்தக தொகை 9370 கோடி அமெரிக்க டாலராகும். இவ்வெண்ணிக்கை, இவ்வமைப்பு நிறுவப்பட்டதன் துவக்கத்தில் இருந்த்தை விட 9 மடங்கு ஆகும்.
சீன வணிகத்துறை அமைச்சகம் மற்றும் அன்னிய நாணய பணியகத்தின் புள்ளிவிபரத்தின் படி, 2016ஆம் ஆண்டில் சீனாவின் தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட நேரடி முதலீட்டுத் தொகை 18320 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. தொடர்ந்து உலகில் இரண்டாவது இடம் வகித்துள்ளது. வெளிநாடுகளிலான சீனாவின் முதலீட்டின் விரைவான வளர்ச்சி மூலம், உபசரிப்பு நாடுகளுடன் கூட்டு நலன் பெற முடியும் என்றும் சுன் ஜீவென் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், வெளிநாடுகளில் சீனாவின் முதலீடு வேகமாக அதிகரிப்பது சீனத்தொழில் நிறுவனங்களுக்கு நலன் தருவது மட்டுமல்லாமல், தொடர்புடைய உற்பத்திப்பொருட்கள், சாசனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவை வெளிநாடுகளில் வளர்ச்சியடைவதை முன்னேற்றுவித்து, உள்நாட்டுப் பொருளாதார மாற்றத்தையும் விரைவுபடுத்தி, உலகப்பொருளாதார வளர்ச்சியை வலுமையாக முன்னேற்றியுள்ளது.
ஐ.நா வர்த்தக வளர்ச்சி கூட்டம் அண்மையில் வெளியிட்ட 2017ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கையின் படி, சீனாவில் வெளிநாட்டு முதலீட்டு அளவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1 விழுக்காடாக குறைந்துள்ளது. உலகளவில் நாடு கடந்த முதலீடு குறைந்து குறிப்பாக ஆசியாவின் வளரும் நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டின் அளவு பெருமளவிலாக குறைந்த பின்னணியில் சீனாவில் வெளிநாட்டு முதலீட்டு நிலைமை நிதானத்தை நிலைநிறுத்துவது சிறப்பாக உள்ளது என்றும் சுன் ஜீவென் வலியுறுத்தினார்.(கலைமகள்)