பெய்ஜிங்-ஷாங்காய் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர் வண்டி
கடந்த 5 ஆண்டுகளாக, சீன அதிவிரைவு தொடர் வண்டி இருப்புப் பாதையின் நீளம், சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 22 ஆயிரம் கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக இது உலகில் முதலிடம் வகித்து வருகிறது. அதிவிரைவு தொடர் வண்டி செல்லும் பரந்த பரப்பளவு, பிணையமான முறையில் இயங்குவது முதலியவற்றால், மக்களின் பயணச் சுற்றுச்சூழல் பெரிதும் மேம்பட்டுள்ளது.
சீனாவின் ஷான்சி மாநிலத்தின் பாவ்ஜி நகரையும், கான்சூ மாநிலத்தின் லான்சோ நகரையும் இணைக்கும் பாவ்-லான் அதிவிரைவு தொடர் வண்டி, ஜுலை திங்கள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறந்து விடப்படவுள்ளது. இந்த இருப்புப் பாதை, ஷான்சியின் குவான்சோங், கான்சூவின் தியான்ஷுய், திங்சி முதலிய வறிய பிரதேசங்கள் வழியாகச் செல்லும். போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின், நெடுகிலுள்ள தியான்ஷுய் பிரதேசத்திலுள்ள ஆப்பிள் பயிரிடும் விவசாயி குடும்பங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். ஆப்பிள் பயிரிடுத்தலில் ஈடுபடும் உள்ளூர் விவசாயி வூசேங்ச்சுவான் கூறுகையில்,
போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின், நாங்கள் சுற்றுலாத் துறையிலும் ஈடுபட முடியும். இதனால், வருமானம் பெரிதும் உயரும் என்று கூறினார்.
மக்கள் சுற்றுலா செல்வதற்கு அதிவிரைவு தொடர் வண்டி வசதியாக உள்ளது. யுன்னான் மாநிலத்தையும், ஷாங்காய் மாநகரத்தையும் இணைக்கும் 2000 கிலோ மீட்டர் நீளமுடைய ஹூ-குன் அதிவிரைவு தொடர் வண்டி கடந்த டிசம்பர் 28ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. யுன்னான் நூஜியாங் சோவில் பூமி இனத்தைச் சேர்ந்த ஹெகுன்லா கூறுகையில், நான் இந்த அதிவிரைவு தொடர் வண்டியில் பயணம் செய்த முதல் பயணியர்களில் ஒருவராவர். எனது சொந்த ஊர் மிகவும் தொலைத் தூரத்தில் உள்ளது. போக்குவரத்து வசதியின்மையால், சொந்த ஊரிலிருந்து வெளியே செல்லும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்.
தற்போது, ஹூ-குன் அதிவிரைவு தொடர் வண்டியின் இருப்புப் பாதையைப் பயன்படுத்தி, யுன்னானின் குன்மிங் நகரிலிருந்து, பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ முதலிய மாநகரங்களுக்குச் செல்லக் கூடிய அதிவிரைவு தொடர் வண்டிகள் போக்குவரத்துக்கு வந்துள்ளன. இந்நகரங்களுக்கிடையிலான பயண நேரம் பெரிதும் குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக, பாவ்-லான், ஹூ-குன் உள்ளிட்ட இருப்புப் பாதைகள் மூலம் சீனாவின் அதிவிரைவு தொடர் வண்டி பிணையத்தின் நீளம், உலக அளவில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானது. நீண்டகாலத்தின் இருப்புப் பாதை பிணையத்தின் திட்ட வரைவின் புதிய பதிப்பை சீனா 2016ஆம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி, 2020ஆம் ஆண்டுக்குள், சீன அதிவிரைவு தொடர் வண்டி பிணையத்தின் நீளம், 30 ஆயிரம் கிலோ மீட்டரை எட்டும். 80 விழுக்காட்டுக்கு மேலான மாநகரங்கள் இந்த பிணையத்தின் மூலம் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.