பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கருத்தரங்கு
பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கருத்தரங்கு 11ஆம் நாள், தெற்கு சீனாவின் ஃபூச்சியாங் மாநிலத்தின் ஃபூசௌ நகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு அமைப்புமுறை உருவாக்கப்பட்ட பிறகு, இத்தகைய கருத்தரங்கு நடைபெறுவது இதுதான் முதல்முறை. பிரிக்ஸ் தலைவர்களின் சியாமன் உச்சிநாட்டுக்கு வழிகாட்டுவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும். பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள், பிரிக்ஸ் ஒத்துழைப்புக்களில் முக்கிய தகுநிலையை வகிக்கின்றன. பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்களை, பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்தும். அச்சுறுத்தலைச் சமாளித்து, உலகமயமாக்கத்தின் சரியான வளர்ச்சி முன்னேற்றப் போக்கைப் பேணிக்காக்கும். உலகின் மேலாண்மை அமைப்புமுறையை மேலும் நியாயப்படுத்தும் சீர்திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று இதில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளான பிரிகிஸ் நாடுகள், கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சியின் மூலம் அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களுக்கிடையில் பேச்சுவார்த்தையையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்துவதன் மூலம், பிரிக்ஸ் நாடுகள் சியாமன் உச்சிமாநாட்டிற்குக் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி, பிரிக்ஸ் ஒத்துழைப்புகளைக் கூட்டாக விரைவுபடுத்தவும் ஆழமாக்குவது என்பது 11ஆம் நாள் நடைபெற்ற இக்கருத்தங்கரின் நோக்கமாகும். கூட்டு வளர்ச்சி நோக்கத்தை நனவாக்கும் வகையில், ஒன்றின் மீது ஒன்று சகிப்பு மேற்கொண்டு இணைந்து முன்னேற்றி, வளர்ச்சிக்கான முன்னுரிமையை பிரிக்ஸ் நாடுகள் வழங்குகின்றன. தற்போது, உலகப் பொருளாதார மொத்த அளவில், பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 12 விழுக்காட்டிலிருந்து 23க்கு உயர்த்தப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு விகிதம், உலகின் பொருளாதார அதிகரிப்புப் பங்கில் சுமார் 50 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் செயலாளருமான லியூ யுன்ஷான் அதே நாள் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவதுபன்முகங்களிலும், பல அடுக்கு ஒத்துழைப்பு கட்டுக்கோப்புக்களில், பொருளாதாரம், நாணயம், வர்த்தகம், சமூகம், மனித தொடர்பு, அறிவியல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள நாங்கள் முயற்சி செய்துள்ளோம். புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகள், உலகின் மேலாண்மையில் பிரதிநிதித்துவத்தையும் கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் பயனுள்ள முறையில் உயர்த்தி, பல்வேறு நாடுகளுக்கு நன்மை பயக்கும். புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு முக்கிய மேடையாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளன. உலகப் பொருளாதார அதிகரிப்பை முழுமைப்படுத்துவது, மேலாண்மை கட்டமைப்பை, சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்தை விரைவுபடுத்துவது ஆகியவற்றின் முக்கிய ஆற்றலாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.