கடந்த ஐந்து ஆண்டுகளில், சீன விண்வெளி ஆய்வுத்துறை பல முன்னேற்றங்களைப் பெற்றதுடன், பொது மக்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது.
2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாள், சீனாவின் முதலாவது சரக்கு விண்கலமான தியன்சோ-1, லாங்மார்ச்-7 ஏவூர்த்தியால் வெற்றிகரமாக விண்னில் செலுத்தப்பட்டது. சீனாவின் ஏவூர்த்தி தொழில் நுட்பம் புதிய பாய்ச்சல் வளர்ச்சியை நனவாக்கியதை இது காட்டுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நடுத்தர மற்றும் கனரக ஏவூர்திகளின் தொழில் நுட்பங்கள் முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றதுள்ளதுடன், பெய்தாவ் வழிக்காட்டு செயற்கைக் கோள் அமைப்புமுறை ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் பரவலும், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பொறியியலுக்கான விண்வெளி சோதனை ஆராய்ச்சி கூடத்தின் கட்டமும் வெற்றியை பெற்றுள்ளது. அத்தோடு, விண்வெளி தொழில் நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி, சமூக வாழ்வு வளர்ச்சி வாய்ப்பை அதிகரித்துள்ளது. சீன தேசிய பாதுகாப்புக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைப் பணியகத்தின் தலைமைப் பொறியியலாளர் தியென் யூ லொங் கூறுகையில், செயற்கைக் கோள் தொழில் நுட்பம், பொது மக்களின் வாழ்க்கைக்கு சேவை வழங்கி வருகின்றது. ஃபேங்யுன் வானிலை செயற்கைக் கோள் தொகுதி, வானிலை முன் அறிவிப்பை வழங்கி வருகின்றது. பெய்தாவ் வழிக்காட்டு செயற்கைக் கோள் அமைப்புமுறை, சரியான திசையறியும் சேவையை அளித்து வருகின்றது. உயர் மிகுந்த பிரி திறனுடைய தொலை உணர்வறிச் செயற்கைக்கோள், சீற்றப் பேரழிவு குறைப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர மற்றும் கிராமப்புற திட்ட வரைவு, மூல வளக் கண்டுபிடிப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு வரை, சீன செயற்கைக் கோள்களின் பயன்பாட்டினால் ஏற்படுத்தப்பட்ட உற்பத்தி மதிப்பு, 20 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று கூறினார்.
செயற்கைக் கோள் தொழில் நுட்பத்தை தவிர, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி மண்டல தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள், புதிய மூலப் பொருட்கள், நுண்மதி நுட்ப தயாரிப்பு, மின்னணு தகவல் முதலிய துறைகளின் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றன. இதன் மூலம் பெறப்பட்டுள்ள சாதனைகள் பொது மக்களின் வாழ்க்கையில் படிப்படியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தவிரவும், பெரிய தரவுகளை, மேகக் கணிமை, சரக்கு இணையம் உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களுடன் விண்வெளி மண்டல தரவுகளை இணைப்பதை சீனா எதிர்காலத்தில் விரைவுப்படுத்தும்.