தற்போது, சீனாவின் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 8 ஆயிரம் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. சேவைத் தொழில் பன்முகங்களிலும் அதிகரித்து வரும் முக்கிய காலக்கட்டத்தில் சீனா நுழைந்துள்ளது. இது குறித்து மங் வெய் கூறியதாவது:
"2016ஆம் ஆண்டு சீனச் சேவைத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வகிக்கும் விகிதம், 51.6 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது, பொருளாதார அதிகரிப்புக்குப பங்காற்றும் விகிதம் 58.2 விழுக்காட்டை எட்டியுள்ளது. புதிதாக பதிவு செய்துள்ள சேவை தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, சேவைத் தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையில் 81 விழுக்காடு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் சீரான செயல்பாட்டை நிலைநிறுத்துவதற்கான முக்கிய ஆற்றலாகவும், புத்தாக்கம் செய்தல், தொழில் நடத்தல், வேலை வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்கான முக்கிய துறையாகவும் சேவைத் தொழில் மாறியுள்ளது" என்றார் அவர்.
இருந்த போதிலும், உற்பத்தி தன்மையுடைய சேவைத் தொழில், தயாரிப்புத் தொழிலின் நிலை உயர்வு மற்றும் மேம்பாட்டுக்கு அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை. வாழ்க்கையோடு தொடர்புடைய தன்மையுடைய சேவைத் தொழிலின் பல துறைகள், குடிமக்களின் தேவையை நிறைவு செய்வது கடினமாக இருக்கின்றது.
மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், 2017 முதல் 2025ஆம் ஆண்டு வரையான சேவைத் தொழிலின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி திட்டத்தைச் சீனா அண்மையில் வகுத்துள்ளது. சீனாவின் சேவைத் தொழிலும், தயாரிப்புத் தொழிலும் ஒன்றை ஒன்று விரைவுபுடுத்துவதை முன்னேற்ற வேண்டும். 2025ஆம் ஆண்டு வரை, சேவைத் தொழிலின் அதிகரிப்பு மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வகிக்கும் விகிதத்தை, 60 விழுக்காடாக உயர்த்த வேண்டும். சேவைத் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை, சமூகத்தில் வேலை செய்பவரின் மொத்த எண்ணிக்கையில் வகிக்கும் விகிதத்தை, 55 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயல் திட்டங்களையும், முக்கிய திட்டப்பணிகளையும் சீனா நடைமுறைப்படுத்தி, சேவைத் தொழிலின் வளர்ச்சியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், சேவைத் தொழில் வெளிநாட்டுத் திறப்பு, இதில் முக்கியப் பகுதியாகும் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.