• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாண்டம் செயற்கைக்கோள் மூலம் தொலைத் தொடர்பில் சீனாவின் பெரும் சாதனை
  2017-06-16 10:55:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா சொந்தமாக ஆய்ந்து தயாரித்துள்ள மோஸ் எனும் குவாண்டம் செயற்கைக்கோள் மூலம், ஒன்றுடன் ஒன்று சிக்குப்படுத்தும் இரட்டை ஒளியணுகளை வானிலிருந்து தரைக்கு அனுப்பும் பரிச்சோதனையில், 1,200 கிலோமீட்டர் தொலைத் தொடர்பு கிடைத்துள்ளது. சீன அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் குவாண்டம் செயற்கைக் கோள் திட்டத்தின் முதன்மை அறிவியலாளருமான பென் ஜியன்வெய் உள்ளிட்ட சீன அறிவியலாளர்கள், அமெரிக்காவின் "அறிவியல்"எனும் இதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில், இந்தச் சாதனை அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகளவில், ஆயிரம் கிலோமீட்டருக்கு மேலாக இத்தகைய தொலைத் தொடர்பு மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். அறிவியல் இதழின் ஆய்வுக் கட்டுரையின் மதிப்பீட்டாளர்கள் இந்த ஆய்வுச் சோதனையைப் பாராட்டுகையில்,

இச்சாதனை, சாத்தியமான நடைமுறைப் பயன்பாடு மற்றும் அடிப்படை அறிவியல் தேடல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய தொழில்நுட்ப சாதனையாக திகழ்கிறது என்றும அறிவியல் துறை மற்றும் பொது மக்களிடையே இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்தனர். (மதியழகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
• பாகிஸ்தானில் வாகனத் தீ விபத்து
• ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
• சீன வெளியுறவு அமைச்சர்-பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை
• 2ஆவது சீன-இந்திய சிந்தனை கிடங்குகள் கருத்தரங்கு
• திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
• அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடையை நீக்க:அமெரிக்காவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040